இப்போதெல்லாம் கடிதங்கள்...
தற்கொலைக் கடிதங்களாக
மட்டுமே
காணக்கிடைக்கின்றன..
சமுக, அரசியல், இலக்கியம் தொடர்பான
சமுக, அரசியல், இலக்கியம் தொடர்பான
கடிதங்களை
தொகுத்து புத்தகங்களாக
வெளியிட்டு படித்தது
எல்லாம் ஒரு காலம்..
இந்த தலைமுறைக்கு
இந்த தலைமுறைக்கு
கடிதம் என்றால்
அது
தற்கொலைக்கானது மட்டுமே
என்றுள்ள புரிதலை
எப்படி
மாற்றுவது அல்லது தடுப்பது..
எதிர்காலத்தில்
எதிர்காலத்தில்
தற்கொலை கடிதங்களை மட்டுமே
தொகுத்துப் படிக்கப்போகின்ற
மிகக் கொடூரமான,
மனிதத் தன்மையற்ற,
சமூகத்தில் வாழ்கின்றோம்
மிகக் கொடூரமான,
மனிதத் தன்மையற்ற,
சமூகத்தில் வாழ்கின்றோம்
என்ற
அவலமே மிஞ்சப்போகின்றது...
மூன்று மாணவிகள் எழுதியதாகக் கூறப்படும் கடிதங்கள்..
(25.06.2016 முகநூல் பதிவு)
1 comment:
தற்கொலைகள் வேதனை அளிக்கின்றன. தவிர்க்க வேண்டும். புகார்கள் வரும்போது உண்மை நிலையை விசாரித்து நடவடிக்கை எடுத்தால் பல பிரச்னைகளை தீர்க்கலாம். யாரெல்லாம் பொறுப்போ அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கண் துடைப்பு நடவடிக்கை கூடாது.
Post a Comment