சமீபத்தில் படித்த நாவல்.
எழுத்தாளர் சு.தமிழ்ச்செல்வி அவர்களின் கற்றாழை.
-----------------------------------------------------------------------------
இதைப் படித்ததும் சிவகாமி அவர்களின் ஆனந்தாயி, கண்மணி குணசேகரன் அவர்களின் அஞ்சலை நாவல்கள் இயல்பாக மனதில் ஓடியது.
மூன்று கதைகளுக்குமான பின்னணி ஒன்றுதான்.
வேறு வேறு இடம், பகுதி மற்றும் கண்ணோட்டம் உடையது. மூன்றின் பின்னணியும் குடும்பத்தலைவி அனைத்துவித இழிவு, கொடுமை, அவலம் அனைத்திற்கும் குடும்பத் தலைவரால் ஆளாவார்கள். குடும்பத் தலைவர் வேலை (விவசாயம்) செய்யமாட்டார். குடி பழக்கம், பிற பெண்களுடன் நிரந்தர மற்றும் தற்காலிக தொடர்பு அல்லது வாழ்வது. செலவுகளுக்கு குடும்ப சொத்துக்களை விற்பது என்பது நடைமுறையாக உள்ளது. அனைத்தையும் குடும்ப கெளரவம் அல்லது குழந்தைகள் அல்லது உறவு முறைக்காக சகித்துக்கொள்வது என்பதே குடும்பத் தலைவிகளின் நிலை. இந்தக் கற்றாழையில் இறுதியில் கணவன் இன்னொரு பெண்ணை குடும்பம் நடத்த அழைத்து வந்ததும் வீட்டை விட்டும் வெளியேறும் குடும்பத் தலைவி திருப்பூர் சென்று இதுபோன்று ஏற்கனவே கணவன் அல்லது காதலித்தவனால் கைவிடப்பட்ட பெண்களுடன் தங்கி வேலை செய்து, எல்லோரும் சேர்ந்து ஒரு இடம் வாங்கி வீடு கட்டி ஒரே குடும்பமாக வாழ்கின்றனர். அப்போதுதான் அவர்கள் அனைவரது வாழ்விலும் ஒரு புது நம்பிக்கை, எதிர்காலம், புத்துணர்வு, நிம்மதி உருவானதாக உணர்கின்றனர். சொத்து என்பது நிரந்தர வாழ்வுக்கான அடையாளமாக உள்ளது. இறுதியில் குடும்பத் தலைவியின் மகளும் கணவனிடமிருந்து பிரிந்து திருப்பூரில் அப்பெண்களின் குழுவில் இணைவதோடு கதை முடிகின்றது.
மூன்று கதைகளிலுமே கிராமங்களில் சில ஆண் மற்றும் பெண்களிடையே நிகழ்கின்ற திருமணத்தை தாண்டிய உறவுகள் குறித்தும் கையாளப்பட்டுள்ளது முக்கியமான ஒன்று. குடும்பங்கள் சிதைவதற்கு இதுபோன்ற திருமணத்தை தாண்டிய உறவு, பொருந்தா திருமணங்களுமே பின்னணியாக உள்ளதை நுணுக்கமாக நாவல்கள் பதிவு செய்துள்ளன.

(!4.01.2016 முகநூல் பதிவு)
No comments:
Post a Comment