நீதியரசர் கிருஷ்ணய்யர் விருது
பேராசிரியர் கல்யாணி (எ) கல்விமணி
---------------------------------------------------------
மதுரையிலிருந்து திரு.பாட்சா அவர்களின் தலைமையில் நீண்ட காலமாக செயல்படுகின்ற அமைப்பு சோக்கோ அறக்கட்டளை.
கிருஷ்ணய்யர் அவர்களோடு நெருக்கமாக பணியாற்றிய அமைப்பு. ஒவ்வொரு ஆண்டும் அவர் பெயரில் கிருஷ்ணய்யர் நினைவு விருது வழங்கி வருகின்றது. இந்த ஆண்டு
கிருஷ்ணய்யர் அவர்களின் நூற்றாண்டு விழாவினையொட்டி இந்தியா முழுவதும் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குகின்ற 100 பேருக்கு கிருஷணய்யர் நினைவு விருதினை சென்னை, மதுரை, திருவனந்தபுரம், டெல்லி ஆகிய இடங்களில் வழங்குகின்றது.
சென்னையில் விருது வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை 2-ஆம் தேதி நடைபெற்றது.
இதில் பேராசிரியர் கல்யாணி, வழக்கறிஞர் பொ.ரத்தினம், பேராசியர் அ.மார்க்ஸ், புதுவை கோ.சுகுமாறன், வழக்கறிஞர் சத்தியச்சந்திரன், கவிஞர் இன்குலாப் உள்ளிட்ட 37 பேருக்கு வழங்கப்பட்டது.
இதில் பேராசிரியர் கல்யாணி, வழக்கறிஞர் பொ.ரத்தினம், பேராசியர் அ.மார்க்ஸ், புதுவை கோ.சுகுமாறன், வழக்கறிஞர் சத்தியச்சந்திரன், கவிஞர் இன்குலாப் உள்ளிட்ட 37 பேருக்கு வழங்கப்பட்டது.
மூத்த வழக்கறிஞர் சத்தியசந்திரன்...
------------------------------------------------------
இன்று தமிழகத்தில் அரசாங்கத்திடமிருந்து பாதிக்கப்பட்டோர் நிதி கிடைக்கின்றது என்றால் அதற்கு காரணமானவர். குற்றமிழைத்தோரு தண்டனை சரி. ஆனால் பாதிக்கப்பட்டோரு நிவாரணம் வேண்டும் என இவர் போட்ட பொதுநலன் வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பில்தான் Victim Compensation இன்று வழங்கபடுகின்றது.
வழக்கு போட்டு அம்பேத்கர் திரைப்படத்தை தமிழில் கொண்டுவந்தவர்.
மேலவளவு படுகொலையில் வழக்கறிஞர் ரத்திரன் அவர்களோடு இணைந்து குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிகொடுத்தவர்.
குறிப்பாக வன்கொடுமை தடுப்பு சட்ட செயலாக்கத்துக்காக நீதிமன்றத்தோடும் தொடர்ந்து போராடுபவர்..
இன்னும் நிறைய சொல்லலாம்.
இவரை விருது வழங்கும்போது அறிமுகப்படுத்திய நீதிபதி அக்பர் அலி வார்த்தையில் சொல்லவேண்டுமென்றால்..”யாருக்கெல்லாம் வழக்கு நடத்த வழியில்லாமல் உள்ளதோ.. அவர்களுக்காக நீதிமன்றத்தில் வழக்காடுகின்றார்.. இவரின் வழக்கென்றால் அதில் நியாயம் இருக்கும் என எங்களுக்கு தெரியும்..’’ என்று கூறினார்...இவ்வளவு சிறப்புக்குறிய வழக்கறிஞர் சத்தியச்சந்திரன் அவர்களுக்கும் தேசிய மனித உரிமைகள் ஆணைய உறுப்பினரும், உச்ச நீதி மன்ற நீதிபதியுமான திரு.முருகேசன் அவர்கள் கிருஷ்ணய்யர் நினைவு விருதினை வழங்கினார்.
(6.01.2016 முகநூல் பதிவு)
No comments:
Post a Comment