புரட்சியாளர் அம்பேத்கர் என்கிற தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டமும்… நாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்ட குடியரசு தினத்தை அம்பேத்கர் நாளாக போற்றப்படவேண்டிய உழைப்பும்…
------------------------------------------------------------------------------------
இந்தியாவிற்கான அரசியலமைப்பு உருவான வரலாற்றுப் பின்னணியை பார்க்கலாம்.
அரசியலமைப்பு சட்டம் உருவாக்க அம்பேத்கர் அவர்களின் உழைப்பு மகத்தானது…
இன்னொரு மனிதனால் முடியாதது.
---------------------------------------------------------------------
அரசியலமைப்புச் சட்ட வரைவுக் குழு

1947 ஆகஸ்ட் 29 -இல் அரசியல் நிர்ணய சபை நிறைவேற்றிய தீர்மானத்தின் அடிப்படையில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எழுத புரட்சியாளர் அம்பேத்கர் தலைமையில் அவர் உட்பட ஏழுபேர் கொண்ட அரசியலமைப்புச் சட்ட வரைவுக்குழு (Drafting committee) உருவாக்கப்பட்டது.
திரு.கோபால்சாமி ஐயங்கார், திரு.அல்லாடி கிருஷ்ணமூர்த்தி திரு.கே.எம்.முன்ஷி, திரு.சையது முகமது சாதுல்லா, திரு.மாதவராவ், திரு.டி.பி.கைதான் ஆகியோர் உறுப்பினர்களாக இக்குழுவில் இடம்பெற்றனர். இதில் ஒருவர் வெளிநாடு சென்றுவிட்டார். ஒருவர் இறந்துபோயுள்ளார். பிறர் அம்பேத்கருக்கு எந்த ஒத்துழைப்பும் அளிக்கவில்லை. அம்பேத்கர் என்கிற அந்த ஒற்றை மனிதன் தன் உடல், பொருள், ஆவி அனைத்தையும் அர்ப்பணித்து 6 மாதத்தில் உருவாக்கிய அரசியலமைப்பு சட்டம்.
இந்த 6 மாதத்தில் அமெரிக்கா, அன்றைய சோவியத் யூனியன், கனடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, தென் அமெரிக்கா உள்ளிட்ட 11 நாடுகளின் அரசியலமைப்பு சட்டத்தை முழுமையாக, வரிக்கு வரி படித்து, உள்வாங்கி, மனதில் அதனை அசைப்போட்டு, சிந்தித்து நமது இந்திய நாட்டிற்கு பொருத்தமான, தேவையான சட்டப்பிரிவுகளை உள்ளடக்கிய இந்திய அரசியலமைப்பு சட்டத்தினை எழுதியுள்ளார். இதற்காக அவர் எடுத்துக்கொண்டது வெறும் 6 மாதங்கள்தான். கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்.
இப்போதையபோன்று கணிணி தட்டச்சு கிடையாது, நகல் கிடையாது, இணையம் கிடையாது, மின் வசதி அதிகமிருந்திருக்காது, தொலைத்தொடர்பும் விரைவில் கிடைக்காது ஆனாலும் இந்தியா போன்ற மிகப்பெரிய, பல்வேறு சிக்கல்கள், வேறுபாடுகள் உடைய நாட்டிற்கு, அனைத்து மக்களுக்கும் நலம் பயக்கின்ற, உரிமைகளைப் பாதுகாக்கின்ற வகையில் ஒரு அரசியலமைப்பு சட்டத்தை பக்கம் பக்கம் எழுதுவது என்றால்…. அம்பேத்காரைத் தவிர வேறு எவராலும் முடியாத ஒன்று.
அம்பேத்கர் தலைமையிலான குழு தனது வரைவு அறிக்கையை 1948, பிப்ரவரி 21-ல் ஒப்படைத்தது. 1949 நவம்பர் 26- ல் அரசியல் நிர்ணய சபை மூலம் அரசமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்நாள் சட்ட தினமாக உள்ளது.
ஜனவரி 26, 1930 இல் லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டில் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றே தீருவது என்ற தீர்மானம் முதன் முதலாக நிறைவேற்றப்பட்டது. இதன் நினைவாக ஜனவரி 26 ஆம் தேதியை இந்தியக் குடியரசு நாளாக ஏற்பது என்றும் அரசியல் நிர்ணய சபை முடிவு செய்தது. அதனால் இந்திய அரசியலமைச் சட்டம் 1950 சனவரி 26 அன்று நடைமுறைக்கு வந்தது. இது குடியரசு நாளாகும். அன்றே பிரிட்டிஷ் அரசாட்சியில் இருந்து இந்தியா நீக்கப்பட்டது. அரசியலமைப்பின்படி இந்தியா ஒரு கூட்டாட்சி (federalism நாடாகும். ஆனாலும் நடைமுறையில் கூட்டாட்சி என்ற சொல்லிற்குப் பதிலாக ஒன்றியம் (union) சொல்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களால் பிற நாடுகளின் அரசமைப்பு சட்டங்களில் இருந்து பெறப்பட்ட கூறுகள்
• கனடாவில் இருந்து கூட்டாட்சி முறை
• அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்து அடிப்படை உரிமைகள் மற்றும் நீதி.
• அன்றைய சோவியத் யூனியனிடமிருந்து அடிப்படைக் கடமைகள்.
• தென் ஆப்ரிக்காவிடம் இருந்து அரசியல் சட்டத் திருத்த முறை.
• அயர்லாந்திடம் இருந்து அரசு நெறிமுறைக் கோட்பாடுகள்.
• ஜெர்மனியிடமிருந்து அவசர நிலை.
• இங்கிலாந்துமிடமிருந்து பாராளுமன்றம் மற்றும் சட்டத்தின் ஆட்சி.
• ஆஸ்திரேலியாவிடமிருந்து அதிகாரப் பொதுப்பட்டியல்.

இந்திய அரசமைப்பு சட்டம் உருவாக்கப்படும்போது, பல்வேறு நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் கூறுகள் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதனால் இந்திய அரசமைப்பு சட்டத்தை, ‘கடன்களின் பொதி’ என்பர்.
இந்திய அரசியலமைப்பு உருவான வரலாறு
இந்தியத் துணைக்கண்டத்தின் பெரும்பாலான பகுதிகள் 1858 லிருந்து 1947 வரை ஆங்கிலேயர்களின் காலனி ஆட்சியின் கீழ் இருந்தது. இந்திய விடுதலைப் போராட்டம் தொடங்கியதிலிருந்தே அரசியல் நிர்ணய சபை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. எம்.என்.ராய் அவர்கள்தான் இதற்கான கருத்தினை முன் வைத்தார். இந்தியர்களுக்கு அரசமைப்பு எழுதும் ஆற்றல் இல்லை என்ற லார்ட் பிர்ஹ்ன்வுட்டின் சவாலுக்கு எதிராக, 1928&இல் நேருவின் அறிக்கை வெளியிடப்பட்டது. இதில் பிரிட்டிஷ் மேலாதிக்கத்திற்கு உட்பட்ட சுயாட்சி கேட்கப்பட்டிருந்தது. நேதாஜி உள்ளிட்டோர் முழு விடுதலை கோரினார்கள். 1929&இல் முழு விடுதலை தீர்மானம் கொண்டுவரலாம் என்றார் காந்தி.
அமைச்சரவை தூதுக்குழு அறிவுரைப்படி 1946 ஆம் ஆண்டு சூலை மாதம் அரசியல் நிர்ணய சபைக்கான தேர்தல் நடைபெற்று, டிசம்பர் மாதம் சபை கூடியது. தலைவராக இராசேந்திர பிரசாத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1947 ஆகஸ்ட் 15- ல் பிரிட்டிஷ் இந்தியாவானது இந்திய மாகாணம், பாகிஸ்தான் மாகாணம் என்ற இரண்டு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது. சுதந்திர இந்தியாவிற்கான அரசியலமைப்பை மட்டும் உருவாக்கும் பணியை அரசியல் நிர்ணய சபை செய்தது.
முகப்புரை

இந்திய அரசியலமைப்பின் முகப்புரை (preamble)யில், ‘‘இறையாண்மை உடைய ஜனநாயக, சமத்துவ, சுதந்திரக் குடியரசு’ என்றும் ‘‘இந்திய ஒன்றியம்’ என்றும் பெயரிடப்பட்டுள்ளது. மேலும் விரிவாக சொல்லவேண்டுமென்றால் கீழ்கண்ட பொருள் தரும்படி சட்ட முகப்புரை கூறப்பட்டுள்ளது....
இறையாண்மை (Sovereign) கொண்ட சமதர்ம (socialit), சமயச்சார்பற்ற (secular) மக்களாட்சி குடியரசை (Democratic Republic) அமைத்திட உறுதி பூண்ட
இந்திய மக்களாகிய நாம் அனைத்து குடிமக்களும்..
சமூக, பொருளாதார, அரசியலில் நீதி..
எண்ணத்தில், வெளிப்படுத்தலில், நம்பிக்கையில், வழிபடுதலில் சுதந்திரம்..
தகுதி, வாய்ப்புரிமையிலும் சமநிலை பெறவும், அதை மேம்படுத்தவும்
தனி நபர் மாண்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு கொண்ட சகோதரத்துவம்..
பெற்றிட உறுதி செய்து, இந்த 1949 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26 ஆம் நாள் நமது அரசமைப்பு அவையில் இந்த அரசமைப்புச் சட்டத்தை ஏற்று, இயற்றி நமக்கு நாமே வழங்கிக்கொள்கிறோம்.

இந்திய அரசியலமைப்பின் கூறுகள்
இந்திய அரசியலமைப்பு 22 பகுதிகள் (Chapters) 12 அட்டவணைகளும் (Schedule) 395 பிரிவு(article)களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அரசமைப்பின் தனிச் சிறப்புக்களில் ‘‘அடிப்படை உரிமைகளும்’ அடங்கும். மாறிவரும் சமூக, அரசியல் சூழலுக்கேற்ப 98 முறைகள் இந்திய அரசமைப்பு திருத்தப்பட்டுள்ளது. (2013 வரை

(25.01.2016 முகநூல் பதிவு)
1 comment:
Super murugan bro thaks for your post
Post a Comment