1938 டிசம்பர் மாதம். இந்தி
எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்ட பெரியார் சிறையில் இருக்கின்றார். அதே டிசம்பர்
மாதம் 29-ஆம் நாள் சென்னையில் கூடிய நீதிக்கட்சியின் 14-வது மாநில மாநாட்டில் தந்தை
பெரியார் நீதிக் கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.
சுயமரியாதை மற்றும் சாதி மத, மூட நம்பிக்கை ஒழிப்பு போன்ற பெரியாரின்
சுயமரியாதைப் பிரச்சாரத்தை விரும்பாத நீதிக்கட்சியில் இருந்த சில சனாதனிகள் இதனை எதிர்ப்பார்க்கவில்லை.
1942 ஆம் ஆண்டு முதல் பெரியார் முன்னெடுத்த திராவிடர் இயக்கம்,
நீதிக்கட்சிக்கான பெயர் மாற்றம், சுயமரியாதைப் பிரச்சாரம் போன்றவைகளை 1944 ஆம் மாநாட்டில்
தீர்மானமான நிறைவேற்றுவது என்றும், பெரிய நிலச்சுவான்தார், ஜமீன்தார் போன்றோருக்கு
இதில் இடமில்லை என்பதையும் தீர்மானமாக கொண்டுவரவேண்டும் என்றும் பெரியார் பேசுகிறார்.
இதனால் நிலச்சுவான்தார், ஜமீன்தார் போன்றோர் ஒன்று கூடி பெரியாருக்கு
எதிரான வேலைகளைச் செய்கின்றனர். உள்ளுக்குள்ளேயே தூண்டிவிடுகின்றனர். 1944 ஆம் ஆண்டு
மாநாட்டை நடத்தவிடாமல் தடுக்கின்ற நோக்கில் மாநாட்டு நடைபெறுவதை தடைசெய்து வருகின்றனர்.
பொறுத்தப்பார்த்தப் பெரியார் தன் தலைமையில் மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கின்றார்.
பயந்துபோன பலரும் பெரியாரிடம் வந்து வருத்தம் தெரிவிக்கின்றனர். பிறகு மாநாடு நடந்து
முடிகின்றது.
அடுத்த கட்டம்தான் முக்கியமானது.
அப்போது டாக்டர் அம்பேத்கர் சென்னை வந்திருந்துள்ளார். அவரிடம்
பெரியாரைப் பற்றி குறைகூறி எதிர்ப்பாளர்கள் முறையிட்டுள்ளனர். அம்பேத்கர் பொறுமையாக
அனைத்தையும் கேட்டுவிட்டு ’’மாநாட்டுத்
தீர்மானங்கள் சரிதான். பெரியாரை குறை சொல்லாதீர்கள்’’ என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
(முகநூல் பதிவு)
No comments:
Post a Comment