தமிழகத்தை எதிர்நோக்கியுள்ள புதிய பிரச்சனைகள்
தேர்வில் தேர்ச்சி, சேர்கையில் காலியிடம், கிடைக்காத வேலைககள்
ஆணும், பெண்ணும் சேர்ந்து படிப்பதால் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பு
கல்வி நிலையங்களில் ஆண்களும், பெண்களும் சேர்ந்து படித்தால் சரியாக படிக்கமாட்டார்கள் என்ற ஒரு காரணத்திலும் ஆண், பெண்ணுக்கு தனித்தனியாக பள்ளி, கல்லூரிகள் உருவாக்கப்பட்டன. சமீப இரு ஆண்டுகளாக இருபாலர் படிக்கும் பள்ளிகளை சில தனியார் நிறுவனங்கள் பெண்களுக்கு மட்டுமென மாற்றியும் வந்தனர். விசாரித்தபோது ‘’சில ஆண்டுகளாக பள்ளியில் பயிலும் மாணவர்களுக்குள் உருவாகும் காதல், அதனால் எழும் சிக்கல்கள், அது மேலும் பிரச்சனையாகாமல் சமாளிப்பது, பள்ளிக்கான அவப்பெயர் போன்ற காரணங்களால் எதற்கு தேவையில்லாமல் ரிஸ்க் எடுக்கவேண்டும்’’ என்பதான காரணத்தை அறியமுடிந்தது. இந்நிலையில் அரசு மேற்கொண்ட ஒரு ஆய்வில் ஆணும், பெண்ணும் சேர்ந்து பயில்கின்ற பள்ளிகளில் தேர்ச்சி விகிதங்கள் அதிகமாக உள்ளதாக வெளியிட்டுள்ளது.
10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகள் எண்ணிக்கை 2012 இல் 358, 2013 இல் 453, 2014 இல் 887 ஆக உயர்ந்தபடியுள்ளது. இதேபோன்று +2 தேர்வில் 100% தேர்ச்சி பள்ளிகள் 2013 இல் 42, 2014 இல் 113 பள்ளிகளாக அதிகரித்துள்ளன. இந்நிலையில் மார்ச் 2016 இல் 10-ஆம் வகுப்பு எழுதவுள்ள அரசுப்பள்ளி மாணவர்களின் தேர்ச்சி விகிதம் அதிகரிப்பதற்காக 26,530 ஆசிரியர்களுக்கு 6 கோடியே 44 லட்சம் 21 ஆயிரத்து அறுநூறு ரூயாய் செலவழித்து பல்வேறு பய்றிசிகள மேற்கொண்டு வருகின்றது.
உயரும் மாணவர் எண்ணிக்கைகள்
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பு பல்வேறு புயல்களை கிளப்பி வருகின்ற நிலையில் மாணவர் எண்ணிக்கையும் அதிவேகமாக அதிகரித்து வருகின்றது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 22 கோடியே 9 லட்சமாக இருந்த மாணவர்க் எண்ணிக்கை பத்தாண்டுகளில் மிக மிக அதிகாம உயர்ந்து 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பில் 31 கோடியே 9 லட்சமாக உயர்ந்துள்ளது. இது 38% உயர்ந்துள்ளதைக் காட்டுகின்றது. இப்படி மாணவர் எண்ணிக்கையும், தேர்ச்சி விகிதமும் அதிகரித்துக்கொண்டே போகின்ற நிலையில் உயர்கல்வியில் சேர்க்கையில் காலியிடங்களும் அதிகரித்துக்கொண்டே போகின்றன.
மாணவர் சேர்க்கை காலியிடங்கள்
பொறியியல் : "தமிழகத்தில் அரசு பொறியியல் கல்லூரிகள் 10, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள் 3, சுயநிதி பொறியியல் கல்லூரிகள் 546, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரிகள் 18 ஆக மொத்தம் 577 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் உள்ள 2,92,042 இடங்களில்,
1,67,082 இடங்களில் மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இதுபோக 1,25,160 இடங்கள் காலியாக உள்ளன”’ என்று சட்டப்பேரவையில் உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் அறிவித்துள்ளார்.
மருத்துவம் : தமிழகத்தில் மாநில ஒதுக்கீட்டின்படி 21 அரசு மருத்துவக்கல்லூரிகளில் 2,237 இடங்களும், தனியர் மருத்துவக்கல்லூரிக்கான 738 இடங்களும் கலந்தாய்வில் நிரப்பட்டுள்து. அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு 383 இடங்களில் 60 இடங்களில் மாணவர்கள் சேர முன்வராமல் காலியாக உள்ளது.
சட்டம் : பாடத்திட்டம், படிப்புக் கால ஆண்டு, வயது போன்றவைகள் காரணமாக பல்வேறு குழப்பங்களுடன் தாமதமாக விண்ணப்பங்கள் கொடுத்து, கலந்தாய்விற்கு முன்பு நீதி மன்றத் தலையீட்டு சேர்க்கைகள் நடைபெற்றுள்ளது.
பி.எட் : தேசிய ஆசிரியர் கல்வியியல் கல்விக் கவுன்சில் (என்.சி.டி.இ.) வெளியிட்ட புதிய வழிகாட்டுதல்படி இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக உயர்த்தப்பட்டது. தமிழகத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில் தற்போதைய 2015-16 கல்வியாண்டில் படிப்பு ஓராண்டா அல்லது இரண்டு ஆண்டுகளா என்ற குழப்பம் தொடர்ந்து நீடித்து வருகிறது. அதனால் விண்ணப்பம் அளிக்காமல் தாமதிக்கப்பட்டு வந்த நிலையில் 8 ஆயிரம் விண்ணப்பங்கங்கள் அச்சடிக்கப்படு செப்டம்பர் 3 முதல் 11 வரை விநியோகிக்க உள்ளதாகவும், 4-வது கலந்தாய்வு நடத்துவது என்றும், படிப்பு காலம் ஓராண்டா இரண்டு ஆண்டா என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
3 லட்சம் வேலை காலிப் பணியிடன்கள்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவர் தமிழ்செல்வி அவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் ஊட்டியில் அளித்த பேட்டியொன்றில் தமிழ்நாட்டின் அனைத்து அரசுத் துறைகளிலும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட பணியிடங்கள் காலியாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும், சில துறைகளில் தலித் மற்றும் பழங்குடியினர் பிரிவிற்கான காலியிடங்களை நிரப்பக்கோரிய பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
வேலை இல்லாதோர் எண்ணிக்கை :
தமிழகம் முழுவதும் சூன் 30 ஆம் தேதி நிலவரப்படி வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்துவிட்டு 40.78 லட்சம் பெண்கள் உட்பட மொத்தம் 82.02 லட்சம் பேர் வேலைக்காக காத்திருப்பதாக வேலை வாய்ப்பு இயக்குனரகம் தெரிவித்துள்ளது. இதில், பிற்படுத்தப்பட்டோர் - 34.40 லட்சம்; மிக பிற்படுத்தப்பட்டோர் - 18.90 லட்சம்; ஆதிதிராவிடர் - 18.32 லட்சம்; பழங்குடியினர் - 34,024 பேர் இடம் பெற்றுள்ளனர். மேலும் சிறப்பு பிரிவின் கீழ், பர்மாவில் இருந்து தாயகம் திரும்பியோர் - 1,089; இலங்கையிலிருந்து தாயகம் திரும்பியோர் - 2,416; மாற்றுத்திறனாளிகள் - 1,05,770 பேரும் உள்ளனர்.
இப்படி வேலைக்காக காத்திருக்கின்ற 82 லட்சம் பேரில் பட்டதாரிகள் - 14.3 லட்சம்; முதுநிலை பட்டதாரிகள் - 6.09 லட்சம் பேரும், மருத்துவர்கள் 28 ஆயிரம் பேரும், பொறியல் முடித்தவர்கள் 3.17 லட்சம் பேரும் உள்ளனர்.
இந்நிலையில்தான் எந்த கல்வித்தகுதியும் இல்லாதோரும், தங்களுடைய பிறப்புச் சான்று, ரேசன் அட்டை நகல் மூலம் வேலை வாய்ப்பகத்தில் பதிவு செய்ய முடியும் என்றும் ஆனால் வேலை கிடைக்கும் என உறுதி கூற முடியாது என்றும் வேலைவாய்ப்பு அலுவலக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இவ்வாறு கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் பல்வேறு சிக்கல்களையும், குழப்பங்களையும் எதிர்நோக்கியுள்ள தமிழக அரசு இதற்கான எந்தவொரு புதிய திட்டங்களோ அல்லது இதுகுறித்து விவாதிப்பதற்கோ, பேசுவதற்கோ கூட முன்முயற்சி எடுக்குமா எனத் தெரியவில்லை. தமிழக அரசு மட்டுமே தேர்தல் ஜூரம் பிடித்துவிட்ட நிலையில் இனி எந்தவொரு கட்சிகளும் இவைகளை கருத்தில்கொள்ளாது. ஏதேனும் பொது நல அமைப்புகள் பேசி எல்லோரின் கவனத்தையும் ஈர்த்தால் சில கட்சிகளின் தேர்தல் அறிக்கையில் இவை ஒரு கோரிக்கையாக இடம் பெற வாய்ப்புள்ளது.
No comments:
Post a Comment