Monday, October 12, 2015

மருத்துவ நிதி உதவி - தாரீர்

தி.மு.க. வின் திண்டிவனம் நகர ஆதி திராவிட நலக்குழு அமைப்பாளர்

திரு கிள்ளிவளவன் அவர்கள் புற்று நோய் தாக்கி அவதி
மருத்துவ உதவி தேவை.

28-ஆம் தேதி திண்டிவனம் வருகை தரும் திரு. ஸ்டாலின் அவர்கள் கவனத்திற்கு…


திண்டிவனம் ரோசனையைச் சேர்ந்தவர் கிள்ளிவளன் த/பெ வேங்கடபதி அவர்களுக்கு தற்போது 58 வயதாகின்றது. பள்ளி செல்கின்ற மூன்று குழந்தைகளுடன் வாழ்ந்து வரும் இவர் தேங்காய் மண்டியில் அன்றாட கூலி வேலை செய்தவராகும்.

சிறுவயது முதல் திராவிட முன்னேற்றக் கழகத்தில் ஈடுபாடு கொண்டு தீவிர தொண்டராக செயல்பட்டு வருகிறார். நகரில் தி.மு.க-வின் எந்த நிகழ்ச்சி அறிவிக்கப்பட்டாலும் அதற்கான முழு விளம்பரத்தையும் பொறுப்பேற்று செயல்படுத்துவார். இதுபோன்ற நேரங்களில் வேலைக்கு கூட செல்லாமல் கட்சியின் நிகழ்ச்சியே முக்கியம் என்று முன்னுரிமை அளித்து செயல்பட்டு வந்தார்.

திண்டிவனம் நகரம் மற்றும் அதனைச் சார்ந்த கிராமப்புறங்களுக்கு முன்பு சைக்கிள் ரிக்‌ஷா, தள்ளுவண்டி தற்போது ஆட்டோ, ஜீப் என ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு ஒலி பெருக்கி கட்டிக்கொண்டு விளம்பரம் செய்வார். ஆட்களை சேகரிப்பார். நிகச்சிகளின் முழு நேர அறிவிப்பாளராக விளங்கினார். இதற்காக தி.மு.க-வின் மாவட்ட, மாநில நிர்வாகிகள் பலரும் இவரைப் பாராட்டியுள்ளனர். தெளிவான தமிழ் உச்சரிப்பும், வலுவான குரலும் கூட்டத்திற்கு உதவியாக இருக்கும்.

மேலும் உரோசனையில் உள்ள தாய்த் தமிழ்ப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவராக பெற்றோர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டார்.

இந்நிலையில் புற்று நோய் தாக்கி திண்டிவனம், புதுச்சேரி, சென்னை அரசு பொது மருத்துவமனைகளிலும், சென்னை அடையாறு புற்று நோய் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சென்று அறுவை சிகிச்சை செய்வதற்கான தன்மையைக் கடந்து நோய் தீவிரமடைந்து அறுவை சிகிச்சை செய்தால் உயிருக்கே ஆபத்து என மருத்துவர்களால் கைவிரிக்கப்பட்டு வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். 

வீட்டில் படுத்த படுக்கையோடு இருந்தாலும் அன்றாட மருத்துவம் மற்றும் பராமரிப்பு தேவைபடுகின்றது. வேலைக்கும் செல்லமுடியாமல், வருமானமும் இன்றி, நோயுடனும் போராடிக்கொண்டிருக்கும் இவரை கிடைக்கின்ற உதவிகள் மேலும் சில காலங்கள் இந்த உலகில் நீடித்திருக்க உதவும். ஆதரவளித்து தங்களால் இயன்ற உதவியினைச் செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புக்கு :
கிள்ளிவளவன் – 9786086139.
பேராசிரியர் கல்விமணி – 9442622970.
மு.பூபால் – 9443045315

முருகப்பன் – 9894207407.


 

No comments: