திண்டிவனம் மற்றும் செஞ்சி பகுதிகளுக்கு…
முன்பதிவு அறிவிப்பு. 5000 படிகள்.
ஆகிய மூன்று புத்தகங்களுக்கு.
சீர் வாசகர் வட்டம் வெளியிட்ட முதல் நூல் 'புதுமைப்பித்தன் கதைகள்'. 100 ரூபாய்க்கு வெளியான அந்தப் பதிப்பை இன்றும் வாசகர்கள் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
அக்குறையைப் போக்கும்வண்ணம் புதுமைப்பித்தனின் மிகச்சிறந்த 30 கதைகளை பேரா வீ.அரசு தெரிவு செய்துள்ளார். 320 பக்கங்கள் கொண்ட நூல் தரமான நூலாக்கத்தில் 50 ரூபாய்க்கு 49-வது சென்னை புத்தகக் காட்சியில் கிடைக்கும்.
அதேபோல எழுத்தாளர் ஜெயகாந்தனின் மிகச்சிறந்த படைப்பான 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்' நாவலை மக்கள் பதிப்பாக வெளியிடுகிறோம். 320 பக்கங்கள் கொண்ட நூல் 100 ரூபாய்.
எழுத்தாளர் கரன் கார்க்கியின் புதிய நாவல் 'கருந்துளை'. 376 பக்கங்கள் 250 ரூபாய். மூன்று நூல்களும் சேர்த்து 400 ரூபாய். நூல்களைத் தனியாக பெற இயலாது. மூன்று நூல்களையும் தொகுப்பாக மட்டுமே பெற முடியும்.
இந்த மக்கள் பதிப்பு நூல்களை சென்னை புத்தகக் காட்சிக்கு வர இயலாத வெளி மாவட்ட வாசகர்கள் பெறும் வகையில் முன்பதிவு மையங்களை ஏற்பாடு செய்துள்ளோம்.
#திண்டிவனம்_செஞ்சி பகுதிகளுக்கு
கீழுள்ள வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொண்டு முன்பதிவு செய்துகொள்ளவும்.
பிப்ரவரி 7க்கு மேல் நூல்கள் கிடைக்கும்.
முன்பதிவுக்கு இறுதி நாள் ஜனவரி 5, 2026.

No comments:
Post a Comment