Thursday, September 10, 2015

SASY அமைப்பின் சார்பில்

SASY அமைப்பின் சார்பில் 
கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களுக்கு 
முதலில் நன்றி மேலும் ஒரு கோரிக்கை...
------------------------------------------------------------------------------------------------------
மாவட்டம் முழுவதும் ஒரு கண்காணிப்பு மற்றும் வழிகாட்டும் குழு தேவையென்பதை நீண்ட நாட்களாக எங்களது இளைஞர்களுக்கான சமூக விழிப்புணர்வு மையம் சார்பில் வலியுறுத்தி வந்தோம். இந்நிலையில் கண்காணிப்புக் குழுவினை அமைத்துள்ளதற்கு நன்றியினைத் தெரிவித்துகொள்கிறோம். அதே நேரத்தில் இக்குழு முழுமை பெற சில கூடுதல் திருத்தங்களை செய்யவேண்டியுள்ளது என்பதை தங்கள் கவனத்திற்கு கொண்டுவருவதுடன், அதனையே கோரிக்கையாகவும் முன்வைக்கின்றோம்.
கண்காணிப்பு மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் தலைவராக தலைமை ஆசிரியரும், செயலாளராக உதவி தலைமை ஆசிரியரும், பிற ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழகத்திலிருந்து இருவர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்று கூறியுள்ளீர்கள்.
பல பள்ளிகளில் பெரும்பாலும் ஆசிரியர்கள்தான் சமூக சீர்கேடுகளுக்கும், தாங்கள் கூறுகின்ற அமைதியின்மை மற்றும் ஒழுங்கீனம் என்பதற்கு காரணமாக உள்ளனர். தாங்கள் குறிப்பிட்டுள்ள அமைதியின்மை என்பது மாணவர்களுக்குள் எழும் சாதி ரீதியான மோதல்கள்தான் என்பது அனைவரும் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்றாகும். இதில் தலித் மாணவர்களுக்கு எதிராகத்தான் பள்ளியில் உள்ள தலித் ஆசிரியர்கள் உட்பட அனைவரும் நடந்துகொள்கின்றார்கள். எனவே அனைத்து ஆசிரியர்களும் உறுப்பினர்கள் என்பதற்கு பதிலாக ஆசிரியர்கள் கல்வி ஈடுபாடு, சமூக அக்கறை, பழகும் தன்மை, தீண்டாமை பாகுபாடுகளுக்கு எதிரான எண்ணம் போன்ற காரணிகளையும் கட்டாயம் கருத்தில் கொள்ளவேண்டும். மேலும் எங்களைப் போன்ற சமூக செயல்பாட்டு அமைப்புகளையும், மனித உரிமை ஆர்வலர்களையும், சுய உதவிக் குழுக்களையும் இதில் கட்டாயம் உறுப்பினர்களாக சேர்க்க வேண்டும். அப்போதுதான் நீங்கள் உண்மையான அக்கறையில் இக்குழு அமைத்ததாக கருதமுடியும். இல்லையென்றால் அரசு அளிக்கின்ற புள்ளிவிவரமாக காற்றோடு போய்விடும்...


(7.9.15 முக நூல் பதிவு)

No comments: