Tuesday, September 1, 2015


பல ஆண்டுகள் ஆகிவிட்டது. 
ஊருக்குச் சென்றாலும் வெளியில் எங்கும் செல்வது இல்லை. 
வயதான தாயாரை பார்த்துவிட்டு 
உடனடியாக திரும்பி விடுவது வழக்கம். 
நேற்று ஊருக்குச் சென்றிருந்தபோது 
சில தெருக்கள் தள்ளி போகவேண்டியிருந்தது. 
ஊரில் தெருவும், வழியும் மாறிப்போனது.
இந்த வீட்டைப் பார்த்ததும் பழைய நினைவுகள்.
படம் எடுத்தேன்.
எடுத்த பிறகு பார்த்தால் இது 1942இல் கட்டிய வீடு.
75 ஆண்டுகளுக்கு எழுத படிக்கத் தெரிந்திராத கொத்தனாரால் 4 திருப்பி போடப்பட்டிருந்தாலும் அதன் வண்ணம் இன்னும் மாறாமல் அப்படியே உள்ளது.
நெடுங்குளத்தாள் வீடு என்று சொல்வார்கள். நெடுங்குளம் என்ற கிராமத்திலிருந்து வந்தவர் அதனால். இப்போது நெடுங்குளத்தாயி என்று சொல்கிறார்கள். அவர்களது பெரிய மகன் பால்ராஜ் எனது அண்ணன் வகுப்பு. அடுத்த மகன் குமார் எங்கள் வயது
பல நேரங்களில் இந்த வீட்டில்தான் எல்லோரும் கூடி என்ன செய்வது, எங்கு செல்வது, என்ன செய்வது என்று திட்டமிடுவோம்.
இன்று எல்லோரும் ஒவ்வொரு திசையில்..
எங்களுக்குத் தெரியாதவைகளையும் தாங்கிக்கொண்டு
எத்தனையோ அனுபவங்களோடும், கதைகளோடும், வடுக்களோடும்... 75 ஆண்டு கால அடையாளமாய் இன்னும் கிராமத்தின் மிச்சமுள்ள எச்சங்கள்...
(31.08.15 முகநூல் பதிவு)
— with Ambedkar Murugappan and Mahendra Raja.

No comments: