Thursday, August 24, 2023

சந்திரயான் 3 ம் - விழுப்புரமும். தமிழ் வழிக் கல்விக்கு கிடைத்த வெற்றி!!

சந்திரயான் 3 ம் - விழுப்புரமும்.

தமிழ் வழிக் கல்விக்கு கிடைத்த வெற்றி!!

-------------------------------------------------------------------

சந்திரயானின் 3 திட்டங்களுக்கும் இயக்குநர்களாக செயல்பட்டவர்கள் தமிழ் வழியில், தமிழ்நாட்டரசு பாடத்திட்டத்தில் பயின்றவர்கள். விழுப்புரம் மற்றும் திண்டிவனம் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றியவர்  பேராசிரியர் பிரபா கல்விமணி.

தாய்மொழி வழிக் கல்வியே அறிவிற் சிறந்தது என்ற அறிவியல் நோக்கில் பிரபா கல்விமணி ஒருங்கிணைப்பில் 2000 த்தில் தொடங்கப்பட்டது தாய்த் தமிழ் பள்ளி திண்டிவனம் பள்ளி.

விழுப்புரம் கல்லூரியில் பிரபா கல்விமணி அவர்களுடன்  பணியாற்றி தற்போது சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சிப்  பணியில் ஈடுபட்டு வரும் எழுத்தாளர் யூசுப் ரஜீத் Yousuf Rajid  அவர்களின் "வேர்களைத் தழுவும் விழுதுகள்" எனும் தலைப்பிலான தன் வரலாற்று நூலிம் வெளியீட்டு நிகழ்வினை இப்பேராசிரியர்களிடம் பயின்ற முன்னாள் மாணவர்கள் ஏற்பாடு  செய்துள்ளனர். 

இந்த நூல்  வெளியீட்டு நிகழ்வு 26.08.23 அன்று காலை விழுப்புரத்தில் நடைபெற உள்ளது. இந்த நூலின் விற்பனைத் தொகையுடன், மேலும் நிதி சேகரித்து திண்டிவனம் தாய்த்தமிழ்ப் பள்ளிக்கு வளர்ச்சிக்காக நிதியினை  நிகழ்வின் மூலம்  வழங்க உள்ளனர்.

பள்ளி வளர்ச்சிக்கான நிதியளிக்கும் நிகழ்வில் பங்கேற்று, நூலினை வாங்கி
உதவிட அழைக்கின்றோம்.











 

No comments: