Monday, January 4, 2021

பெற்றோர் ஆசிரியர் கூட்டம் – நுண் வகுப்பறை 100-வது நாள்.

பெற்றோர் ஆசிரியர் கூட்டம் –
நுண் வகுப்பறை 100-வது நாள்.
------------------------------------------------------------------------------------------------------------
கொரோனா ஊரடங்கில் அனைத்தும் முடங்கியதுபோன்று, கல்வியின் எதிர்காலமும் கேள்விக்குறியானது. மாணவர்கள் கல்வியில் பின் தங்குவதைத் தவிர்க்கவும், இட நிற்றல் மற்றும் குழந்தைத் தொழிலாளர்களாக மாறுவதைத் தடுக்கவும், சூலை 15, 2020 கல்வி வளர்ச்சி நாள் அன்று
தாய்த் தமிழ் பள்ளி திண்டிவனம்
பள்ளியில்நுண் வகுப்பறைத் திட்டம் தொடங்கினோம்.
குழந்தைகளின் வீடுகளையே கற்றல் மையமாக்கி நடைபெற்ற இந்த நுண் வகுப்பறை 30.12.2020 அன்று 100-வது நாளை அடைந்தது. அதனைக் கொண்டாடும் விதமாக அன்று மாலை பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கழகக் கூட்டம் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளர்களாக வந்திருந்த திண்டிவனம் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் திரு இராஜமாணிக்கம், ஓய்வு பெற்ற தமிழாசிரியர் கவிஞர் மான்.கு.ஏழுமலை, பேராசிரியர் ஜெ.ராமமூர்த்தி ஆகியோருடன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைபர் திருமதி இராதா ஆகியோர் ஆசிரியர்களையும் பெற்றோர்களையும் வாழ்த்தி பாராட்டிப் பேசினர். தலைமை ஆசிரியர் அ.மரிய அந்தோணி “நுண் வகுப்பறை 100 நாள்” என்ற தலைப்பில் அறிக்கை தயாரித்து வாசித்தார்.
கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டத் தீர்மானங்கள்.
1.அண்மையில் மறைந்த தமிழறிஞர், ஆய்வாளர், பேராசிரியர் தொ.பரமசிவம் அவர்களது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2. நுண் வகுப்பறை 100-வது நாளைக் கொண்டாடும் வகையில் விழா நடத்துவது.
3. தனது மகள் பிறந்த நாள் மகிழ்வாக நமது பள்ளிக்கு 4 கணினி, 1 அச்சியந்திரம் ஆகியவைகளை ரூ. 1,50,00/- ரூபாய் மதிப்பில் வாங்கிக்கொடுத்ததுடன், நுண் வகுப்பறைக் காலங்களில் 15 நாட்களுக்கு உணவு வழங்க ரூ 68,5000/- வழங்கிய, தற்போது பிரான்சில் புதுச்சேரியைச் சேர்ந்த திருமதி புஷ்பா அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், பரிந்துரை செய்த பிரான்சில் வசிக்கும் திரு பொன்முடி அவர்களுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. நூண் வகுப்பறை 100 வது நாள் விழா, கணினி ஆய்வகம் திறப்பு விழாவினை வரும் 06.01.2021 அன்று பள்ளியில், கொரோனா பாதுகாப்பு வழிகாட்டுதலுடன் நடத்துவது என்றும், சிறப்பு அழைப்பாளராக திண்டிவனம் சார் – ஆட்சியர் மருத்துவர் அனு அவர்களை அழைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
5. நுண் வகுப்பறை நடத்த தமது வீடுகளை அளித்த ரோசனை பொதுமக்கள், மையத்திற்கு உடனிருந்த உதவிகள் செய்த பெற்றோர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
6. சமத்துவப் பொங்கல் விழா : முந்தைய ஆண்டுகளைப் போலவே, வரும் 15.01.2021 அன்று பள்ளியில் "9-வது ஆண்டு சமத்துவப் பொங்கல்" விழா நடத்துவது என்றும். கொரோனா தடுப்பு விதிகளின்படி, குறைவான எண்ணிக்கையில் பொங்கல் வைப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.
7. நம்மோடு இணைந்து பொங்கல் விழா கொண்டாட முன் வந்த திண்டிவனம் தமிழ்ச் சங்கத்தின் முடிவினை வரவேற்பது என்றும், தமிழ்ச் சங்கம் சார்பில் மாணவர்களுக்கான கலைத் திறன் போட்டிகளை முன்கூட்டியே நடத்துவது என்றும், தமிழ்ச் சங்கம் வழங்கும் பரிசினை பொங்கல் விழா மேடையில் மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும் வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.




No comments: