Wednesday, July 29, 2015

Stoning of Soraya.. ஈரானில் மட்டுமல்ல.. தமிழகத்திலும்


14 வயது பெண்ணை திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்பதற்காக, சொந்த மனைவியின் மீது திட்டமிட்டு பழிசுமத்துகின்றான் கணவன். ஊர் முன்பு குற்றவாளியாக நிறுத்தப்பட்ட சுரையா என்கிற அப்பெண்ணை ஊரே சேர்ந்து கற்களால் அடித்து கொலை செய்கின்றது. 

2008 ஆம் ஆண்டு ஈரானில் நடந்த உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது இப்படம். இறுதியில் அந்தப் பெண் கற்களால் அடித்துக் கொலை செய்யப்படும் காட்சி கண்ணில் நீரை வரவழைக்கின்ற கொடுமையானது.
 
முதலில் தந்தை, பிறகு கணவன், பிறகு மகன்கள், அதன்பிறகு முல்லா என்கிற மதகுரு அதனைத் தொடர்ந்து ஊர் மக்கள் என அனைவரும் கற்களால் தொடர்ந்து அடித்து கொலை செய்கின்றனர். 

இரவு பார்த்துவிட்டு நெடு நேரம் உறக்கம் இல்லாமல்.. மனம் கவலையில் ஆழ்ந்தது. இதுபோன்று ஊரே சேர்ந்து கற்களால் அடிப்பதெல்லாம் அரபு நாடுகளில் பெருமளவில் மாறிவிட்ட நிலையில்.. இதைவிட மிகமோசமான பழமைவாதிகளாக, நூற்றாண்டுகளுக்கு பின்னோக்கி தமிழகம் சென்று கொண்டிருப்பதின் கொடூரம் நிகழ்ந்துகொண்டிருக்கின்றது. 

தமிழகத்தில் சாதி மீறி காதலித்தது, திருமணம் செய்துக்கொண்டதற்காக ஏராளமான பெண்கள் சொந்தக் குடும்பத்தினரால் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதுவும் கர்ப்பினியாக இருந்தாலும் கருவோடு பெண்கள் அழிக்கப்பட்டுள்ளனர். 

அனைத்து சாதியிலும் இது நிகழ்கின்றது. இதுபோன்று பெண்கள் கொலைசெய்யப்படுவது வெளியில் தெரியாமல் மறைக்கப்படுகின்றது. அல்லது தற்கொலையாக வெளியுலகிற்கு காட்டப்படுகின்றது. 

இந்த சுரையா பெண் படுகொலை செய்யப்பட்டது ஈரானாகப் படவில்லை… தமிழகத்திலும் தொடரவே செய்கின்றது… 

வாய்ப்பிருப்பின் பாருங்கள்..

https://www.youtube.com/watch?v=HEKDnGn9Bw0

No comments: