விழுப்புரம் அருகே உள்ள சித்தணியில் ரயில்தண்டவாளம் தகர்க்கப்பட்ட சம்பவத்தில் 11 தமிழ் உணர்வாளர்களை அழைத்துச் சென்று சட்டவிரோதக்க காவலில் தொடர்ந்து 3 நாட்களாக காவல் துறையினர் அடைத்து வைத்திருந்தனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு மனித உரிமை அமைப்புகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி. ம.தி.மு.க மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் இணைந்து ஆலோசனைக் கூட்டம் நடத்தி தீர்மானங்ள் நிறைவேற்றியது. சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. இதனிடையில் சட்டவிரோதக் காவலில் இருந்ததில் 9 குடுமங்களைச் சேர்ந்தோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தனர். நீதி மன்றம் மனுவை விசாரனைக்கு ஏற்று போலிசாருக்கு கண்டனம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து பல்வேறு காவல்நிலையங்களில் அடைத்து வைக்கப்படிருந்த அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
நேற்று ‘‘கியூ’’ பிரிவு போலீசாரைக் கண்டித்து விழுப்புரம் நகரில் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த முருகன் என்பவரையும், சுவரொட்டிகளையும் போலீசார் விழுப்புரம் நகரக் காவல் நிலையம் கொண்டு சென்றனர். பிறகு பா. ஜோதிநரசிம்மன், கோ.பாபு, தே.ஏழுமலை, க.குமார், சீனி.தங்கராசு மற்றும் சுவரொட்டி ஒட்டிய முருகன் ஆகியோரை போலீசார் காவல் நிலையம் வரவழைத்து வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
தண்டவாளம் தகர்ப்பு வழக்கில் எந்தவித முன்னேற்றமும் கிடைக்காத ஏமாற்றத்திலும், நீதி மன்ற ஆட்கொணர்வு மனு மூலம் வெளியில் அனுப்பிய கோபத்திலும் போலீசார் வேண்டுமென்று திட்டமிட்டு ஒன்றுமில்லாத ஒரு சுவரொட்டி ஒட்டிய வழக்கில் மிக முக்கியமான பிணையில் வெளியில் வரமுடியாத வழக்குப் பிரிவுகளை சேர்த்து சிறையில் அடைத்து, தமிழுணர்வுகள் மீதான தனது பழிவாங்கும் நடவடிக்கையினை தொடங்கியுள்ளனர்.
No comments:
Post a Comment