மூன்று நாட்களாக விசாரணை என்ற பெயரில் சட்டவிரோதக் காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களை விடுவிக்கக்கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. பிற்பகல் 2&30 மணியல் உயர்நீதி மன்றத்தில் தாக்கல்செய்யப்பட்ட மனுவை ஏற்ற நீதிமன்றம் விசாரனையை நாளை தள்ளி வைத்தது.
இதனிடையில் விழுப்புரத்தில் இன்றும் மாலை 4&30 ஆலோசனைக் கூட்டம் கூட்டப்பட்டது. ஞாயிறு அன்ற நடந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் பங்கேற்றனர். சட்டவிரோதக் காவலில் அடைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்கக்கோரியும், உளவுத்துறையினரே சம்பவத்தை நிகழ்த்தியிருக்கலாம் என்பதால், வெளிப்படையான விசாரனை தேவை என்பதை வலியுறுத்தியும் சுவரொட்டி அச்சடித்து வெளியிடுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது. மேலும், விரிவான துண்டறிக்கை அச்சடித்து பொது மக்களிடம் விநியோகிப்பது என்றும் முடிவானது.
எதிர்வரும் 21&06&10, திங்கள் அன்று சட்டவிரோதக் காவலில் அடைக்கப்பட்டுள்ளவர்களின் குடும்பத்தினர் நடத்த உள்ள உண்ணாநிலைப் போராட்டத்தில் அனைவரும் பங்கெடுப்பதுடன், பிற ஆதரவுகளையும் திரட்டுவது என்றும் முடிவானது.
சுவரொட்டி முழக்கங்கள், தீர்மானம் எல்லாம் எழுதி, கூட்டத்தை முடித்து அறையை விட்டு வெளியில் வந்ததும் சுமார் 7&50 மணியளவில், காவல் நிலையங்களில் இருந்து தொலைபேசி வந்தது. அடைக்கப்பட்டிருப்பவர்களை வந்து அழைத்துச்செல்லும்படி. கார் எடுத்துக்கொண்டு அரை மணி நேரத்தில் சென்றார்கள். தினமும் விசாரணைக்கு வந்துவிட்டு, முடிந்து வீடு சென்றதாக எழுதிகேட்டுள்ளனர் போலீசார். அப்படியெல்லாம் எழுதித்தர முடியாது என மறுத்து தோழர்கள் காவல் நிலையங்களியே இருந்தனர். 8&15 மணியளவில் தொடங்கிய இது, ஒரு வழியாக இரவு இந்தநேரம் (10&40) கஞ்சனூர் காவல் நிலையத்தில் மட்டும் பெரும் போராட்டத்திற்கு இடையில் இன்றையா நாள், இந்த நேரம் காவல் நிலையத்தில் இருந்து வெளிச்செல்வதாக எழுதி கையெழுத்துப்போட்டு கிளம்பியுள்ளனர். மற்ற காணை, கெடார், வளவனூர் காவல் நிலையங்களிலும் பிரச்சனை நடந்துகொண்டுள்ளது.
இவர்கள் எவருக்கு இந்த குண்டுவெடிப்பில் எந்தவித தொடர்பும் இல்லை என்பது, நம்மைவிட்ட போலீசாருக்கு நன்றாகவே தெரிகிறது. ஆனாலும், அதிகாரத்தின் பெயரால் காவல் துறை என்ற அச்சுறுத்தல் மூலமாக தோழர்களின் உரிமைப் பணிகளை முடக்க முயல்கின்றனர் போலீசார்.
No comments:
Post a Comment