Tuesday, January 8, 2008

மீண்டும்..மீண்டும்..போலீஸ்

போலீசாரின் அத்துமீறல்
உண்ணாவிரதமிருந்த தலித்துகள் கைது!

தூத்துகுடி மாவட்டம் திருவைகுண்டம் வட்டத்தில் உள்ள இருவப்புரம் பஞ்சாயத்து 13 கிராமங்களை உள்ளடக்கியதாகும். இக்கிராமங்களில் 90% சதவீதம் தலித் மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். சிறுபான்மையினராக உள்ள பிற சாதியினர் பஞ்சாயத்து தலைவராக இருப்பதால், அடிப்படை வசதிகள் செய்யப்படுவதில்லை எனக்கூறி, இக்கிராம தலித் மக்கள், இப்பஞ்சாயத்தை தனிப்பஞ்சாயத்தாக (ரிசர்வ் பஞ்சாயத்து) அறிவிக்கவேண்டும் என்று அரசுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் மனு அனுப்பி வந்துள்ளனர். நீண்ட காலமாக தொடர்ந்து புகார் மனுக்கள் அனுப்பியும் அரசு எதுவும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால், இக்கோரிக்கையை வலியுறுத்தி 100 நாள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்துள்ளனர். இருவப்புரம் பஞ்சாயத்தை தனிபஞ்சாயத்தாக அறிவிக்கவேண்டும் என்ற தலித் மக்களின் இந்த உண்ணாவிரதப்போராட்டம் நாளை 100&வது நாளை நிறைவடைய உள்ளது.

இந்நிலையில் இன்று (08.01.08) அதிகாலை 4.00 மணியில் இருந்து போலீசார் இருவப்புரம் பஞ்சாயத்தை சேர்ந்த கிராமங்களில் நுழைந்து, உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முக்கியமானவர்களைக் கைது செய்யத்தொடங்கியுள்ளனர். மீட்சி மக்கள் இயக்கத் தலைவர் ஜீவன்குமார் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இருவப்புரம் மக்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஜனநாயக ரீதியாக உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளனர். நாளை போராட்டம் இறுதி நாளை எட்ட உள்ள நிலையில் போலீசாரின் இந்த அத்துமீறிய செயல் மிகவும் கண்டிக்கத்தக்கதாகும். மேலும் இச்செயல் அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளை பறிப்பதாகும். கடந்த 2001 ஆம் ஆண்டு இம்மாவட்டத்தில் சங்கரலிங்கபுரம் என்ற ஊரில் போலீசார் நிகழ்த்திய அத்துமீறல்களினால் தமிழகம் முழுவதும் சாதிக்கலவரம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும். அரசு இவைகளை கருத்தில்கொண்டு கீழ்க்கண்டவைகளை நிறைவேற்றக்கோருகிறோம்.

•கைது செய்யபட்டுள்ள அனைவரும் எவ்வித நிபந்தனையும் இன்றி உடனடியாக விடுதலை செய்யப்படவேண்டும்.

•போலீசாரின் அத்துமீறல் சம்பவம் தொடர்பாக பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஒரு குழுஅமைத்து நீதி விசாரனைக்கு உத்திரவிட வேண்டும்.

•மக்கள் தொகையில் 90% தலித் மக்கள் வாழ்கின்ற நிலையில் 1964ஆம் ஆண்டுக்குப் முன்பு இருந்ததைப்போன்று,, இருவப்புரம் பஞ்சாயத்தை தனிப்பஞ்சாயத்தாக தேர்தல் ஆணையம் அறிவிக்கவேண்டும்.

2 comments:

மாசிலா said...

90% பெரும்பான்மை தலித்துக்களை ஆள்வது 10% சிறுபான்மை முட்டாள்களா?

அடே! அடே!
என்னே சனநாயகம்!
வாழ்க இந்திய உலகத்தின் மிகப்பெரிய சனாதன நாயகம்!!!

வெட்கம்! வெட்கம்! வெட்கம்!

T.V.ராதாகிருஷ்ணன் said...

nalla velai.Idhukkum pappan dhan karanamnu ezhudhavillai.Onrai purindhukkollungal.Indraiya pappan dalittugal pakkamdhan.