Wednesday, September 11, 2024
திண்டிவனம் சாலை வசதி
அரசு நிர்வாகம் நினைத்தால் முடியும் என்பதற்கு ஒரு உதாரணம். திண்டிவனம் நேரு வீதி (கடை வீதி) ஒரே இரவில் தார்சாலை போட்டு முடித்துள்ளார்கள். நகராட்சிக்கும், நெடுஞ்சாலைத் துறைக்கும் நன்றி சொல்வதுடன், கடையடைப்பு போராட்டம் நடத்தி, இதனை செய்துமுடிக்க காரணமாக இருந்த திண்டிவனம் வணிகர் சங்கத்திற்கும் நன்றி சொல்லவேண்டும்.
1. இதே போன்று நகரில் மீதமுள்ள அனைத்து இடங்களிலும் பருவ மழை தொடங்குவதற்குள் மேடு, பள்ளம், குழிகளை சீரமைத்து சாலை அமைக்கவேண்டும்.
2. சாலை சரியான பிறகு நேரு வீதியில் போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ளது. மக்கள் நடைபாதை பகுதியில் கடைகள் உள்ளது. மீதமுள்ள இடங்களிலும், சாலைகளிலும் வண்டிகள் நிற்கின்றது. அதனால், நடப்பதற்கோ வண்டியில் செல்வதற்கோ இடமில்லை. இரு சக்கரவாகனமே செல்லமுடியாத நெருக்கடியில் கார்களும், ஆட்டோவும் நடுசாலையில் நின்று ஆட்களை ஏற்றுவதும், இறக்குவதாகவும் இருக்கின்றார்கள். புதுச்சேரியில் உள்ளது போல் சில பகுதிகளைக் குறிப்பிட்டு ஒரு பக்கமாக வண்டிகளை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
3. பலமுறை புகார் அளித்தும் நகரில் நாய்களின் தொல்லைகளைத் தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டதுபோல் தெரியவில்லை. ஒருவேளை நகராட்சி அதிகாரிகள் அல்லது நகர மன்ற உறுப்பினர்கள் யாரையேனும் நாய்கள் கடித்தால் நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா எனத் தெரியவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment