எழுத்தாளர் - பத்திரிகையாளர்
நண்பர் ஜோதி Jothi Narasimman அவர்களின் தந்தை மறைவு..----------------------------------------
விழுப்புரம் பத்திரிகையாளர்களுக்கு
ஜோதியின் வீடு சரணாலயம் போன்றது.
ஜோதியின் அப்பா
தாய்ப் பறவை போன்றவர்.
எல்லோருடனும்
அக்கறையோடு பேசுவார்,
மாறாத புன்னகையுடன்
அன்போடு பழகுவார்.
செய்திகளின் தன்மை
குறித்துப் பேசுவார்.
சில செய்திகளைக் கூறும்போது கவலையோடு அணுகுவார்.
வயது பார்க்காமல் இயல்பாகப் பழகுவார்.
0
காலையில் நான் சென்றதும்,
அவர் படித்துக்கொண்டிருக்கின்ற பக்கத்தை மட்டும் வைத்துக்கொண்டு, மீதமுள்ள அனைத்து செய்தித்தாளையும் கொடுப்பார். "நீங்கள் படித்துவிட்டு கொடுங்கள் ஐயா" என்று கூறினால், "நான் எப்பவேணாலும் படிப்பேன்.. நீங்கதான் எங்காவது ஓடிகிட்டே இருப்பீங்க... படிங்க" என்பார்.
0
"இந்த வயசுல எவ்வளவோ தூரம் எங்கெங்கோ போறீங்க.. வர்றீங்க..
உடம்பையும் கொஞ்சம் பார்த்துகுங்கப்பா.. சரியா சாப்பிட்டுங்க" என எல்லோரையும் சொல்வார்.
0
எனது அப்பாவும் ஆசிரியர் என்பதையும், அவரது சொந்த ஊரான கர்ணத்தம் தாண்டிதான், என்னுடைய சொந்த ஊர் சின்னப்பரூர் என்பதையும் அறிந்த பிறகு இன்னும் அதிகம் பேசினோம்.
0
ஜோதியோடும்,
ஜோதியின் குழந்தைகளோடும்
நெருக்கமாக பழகியவர்..
0
ஐயாவின் இழப்பு,
அவரை அறிந்த / பழகிய
அனைவருக்கும் பேரிழப்பு..
0
காலம் கொடூரமானது.
வேண்டியவர்களை எல்லாம் இழுத்துக்கொள்கிறது.
இழந்து வாடுவோரின்
உடன் இருக்கமுடியாத
இக்கட்டான நிலை..
பெருந்துயரில்
பங்கெடுக்க முடியாத அவலம்.
0
மீண்டு வாருங்கள் ஜோதி..
No comments:
Post a Comment