நாள் : 06.03.2013
அனுப்புதல்
எம்.கே.முகமது இஸ்மாயில் (42/2013)
த/பெ காசிம் சாகிப்,
50/207, சுந்தரவிநாயகர் கோயில் தெரு,
சர்க்கார்
தோப்பு,
திண்டிவனம் - 604 001
பெறுநா
காவல் உதவி ஆய்வாளர்,
திண்டிவனம் காவல் நிலையம்,
திண்டிவனம் - 604 001
ஐயா,
வணக்கம் நான் மேற்படி முகவரியில் என் மனைவி ஷர்புன்பீ மற்றும் இரண்டு மகன்களான அப்பாஸ் அலி (17), சதாம் உசேன் (15), ஒரு மகள் பர்வீன் பேகம் (13) ஆகியவர்களோடு குடியிருந்து வருகிறேன். சைக்கிள் மூலம் தேநீர் விற்று பிழைத்து வருகிறேன். மேற்படி எனது பிள்ளைகள் மூவரும் திண்டிவனம் தேசிய மேல்நிலைப்பள்ளில் முறையே 12,10,8 ஆம் வகுப்புகளில் பயின்று வருகன்ற
2. 12-வது வகுப்பில் படிக்கும் மேற்படி என் மகன் அப்பாஸ் அலி, அந்த வகுப்பில்
தரவரிசையில் 2-வது இடத்திலும், கல்வியில் பின் தங்கிய மாணவர்களுக்கு சந்தேகங்கள் விளக்கும் ஆற்றலும் உள்ளவன். இதனால் சக மாணவர்களிடமும், ஆசிரியர்களிடமும் நன் மதிப்பைப் பெற்றுள்ளான். கடந்த 24.01.2013 அன்று மாலை மேற்படி பள்ளியில் வகுப்பில் மாதிரித்
தேர்வு எழுதிக் கொண்டிருந்த போது பக்கத்திலுள்ள மாணவர் எனது மகனிடம் சந்தேகம் கேட்டுள்ளார். இரண்டு மாணவர்களும் பேசிக்கொண்டிருந்ததைப் பார்த்த மேற்படி பள்ளி ஆசிரியர்களில் ஒருவரான வெங்கட்ராமன் என்பவர் மாணவர்கள்-மாணவிகள் முன்னிலையில் எனது மகனின் நெத்தியிலும், பிடறியிலும் தனது கையால் பலமாக ஓங்கி அடித்துள்ளார்.
உடல் அளவிலும், மன அளவிலும் பாதிப்படைந்த எனது மகன் அன்று இரவு முழுவதும் என் வீட்டில் தூங்காமல் “மர்ஹபா முஸ்தபா” என்றும் “அப்பாஸ் ரலில்லா” ன்று திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டிருந்தான். மறுநாள் 25.01.2013 மிலாடி நபி கொண்டாட்டத்தின் போது என் மகன் பள்ளிவாசலுக்குச் சென்று வழக்கத்திற்கு மாறாக கையை உயர்த்தியும், முஷ்டியை மடக்கியும் ஆக்கிரோசமாகப் பார்த்தும் ஹவுஸ் தண்ணீரைக் குடித்தும் வித்தியாசமாக நடந்து கொண்டிருந்துள்ளான். இதனைப் பார்த்த பள்ளிவாசல் ஹஜரத் என்னிடம் வந்து என் மகனுக்கு உடனே வைத்தயம் பார்க்கச்சொன்னார்.
3. 26.01.2013 அன்று திண்டிவனம் செஞ்சி சாலையில் உள்ள டாக்டர்
கே.பாலசுப்பிரமணியன் அவர்களிடமும், அடுத்த நாள் 27.01.2013 அன்று விழுப்புரத்தில் உள்ள மனோதத்துவ நிபுணர் எஸ்.என்.பாலசுப்பிரமணியன் அவர்களிடமும் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றேன். தொடர்ந்து எனது மகனின் செயல்பாடுகள் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு கூடிக் கொண்டே போனது. எனவே 28.01.2013 அன்று எனது மகனை புதுச்சேரியில் உள்ள மனோதத்துவ நிபுணர் டாக்டர். கே.பாலன் பொன்மணி ஸ்டீபன் அவர்களிடம் கொண்டு போய் காண்பித்தேன். எனது மகன் தொடர்ந்து பள்ளிக்குச் செல்லாமல் மன் நோயாளியான விசயம் தெரிந்த அவனுடன் படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் மதிய இடைவேளை நேரத்தில் என் வீட்டிற்கு வந்து என் மகனைப் பார்த்துச் சென்றனர். அவர்கள் சொன்ன பின்புதான் மேற்படி ஆசிரியர் என் மகனை வகுப்பறையில் அடித்த விபரம் எனக்குத் தெரிய வந்தது. என் மகனைப் பார்க்க வந்த ஆசிரியை சாந்தா என்பவர் எங்களிடம் கூறுகையில் ஆசிரியர் வெங்கட்ராமன் என் மகனை அடிக்கும் போது அதைப் பார்த்த மாணவ, மாணவியர் சிரித்துவிட்டனர்
என்றும் அதனால்தான் அவன் அசிங்கப்பட்டு ஆக்கிரோஷம் அடைந்து ஒரு மாதிரியாக ஆகிவிட்டான் என்று கூறினார். என் ஏழ்மை நிலையை தெரியவந்த மாணவ, மாணவியர் என்னுடைய மகனின் மருத்துவச் செலவுக்காக நன்கொடையாக அளித்த ரூ.1650/- ஐ மேற்படி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் கமலக்கண்ணன் கொண்டு வந்து கொடுத்தார். இச்செய்தியறிந்த பள்ளி நிர்வாகத்தினர் தொடர்ந்து மாணவ-மாணவிகள் என் வீட்டிற்கு வருவதைத் தடுத்து விட்டனர்.
4. பின்பு மேற்படி பள்ளி நிர்வாகி ராம்டெக்ஸ் தியாகராஜன், ஆசிரியர்கள் மூலம் என்னை அவருடைய அலுவலகத்திற்கு அழைத்து என் மகனின் மருத்துவச் செலவையும், படிப்புச் செலவையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்றும், இந்த ஆண்டே உனது மகனை எப்படியாவது பாஸ் பண்ணச் செய்வேன் என்றும் உறுதி அளித்ததோடு அடுத்த நாள் என் மகனை பள்ளிக்கு அழைத்துவரச் சொன்னார். தொடர்ந்து எனது மகனின் நிலைமை மோசமாகக் கொண்டிருந்ததால்
டாக்டர் ஸ்டீபன் அவர்களின் ஆலோசனைப்படி 11.02.2013 அன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றேன். பரிசோதனை செய்த டாக்டர் 4 நாள் சிகிக்சைக்காக மருத்து கொடுத்து அனுப்பினார்.
5. 12.02.2013 அன்று காலை என் வீட்டிற்கு வந்த ஆசிரிர் கமலக்கண்ணன் “உன் மகனை பள்ளிக்கு அழைத்து வா.. உன் மகனை அடித்த ஆசிரியரை உன் மகனிடம் மன்னிப்பு கேட்க சொல்கிறோம். அப்படி செய்தால் உன் மகன் ஓரளவு சாந்தமடைவான்” என்று கூறினார். அப்போது எங்கள் வீட்டிற்கு எதிரே குடியிருப்பவரும், குடும்ப நண்பரும் பெரியவருமான அ.தாமோதரன் “நல்லது... அவனை அழைத்துக் கொண்டு போ” என்று கூறினார். இதனையடுத்து நானும் என் மனைவியும் என் மகனை அழைத்துக் கொண்டு பள்ளிக்குச் சென்றோம். அங்கு என் மகனை தலைமை ஆசியர் அறையில் உட்கார வைத்தனர். பல ஆசிரியர்கள் என் மகனை வந்து பார்த்து ஆசுவதப்படுத்தினர். உயரமாக சிவப்பாக இருக்கும் ஒரு ஆசிரியர் என் மகனை வந்து பார்த்த போது அவன் சீற்றமடைந்தான். உடனே அவர் அங்கிருந்து சென்றுவிட்டார்.
6. பின்பு எனது மகனை தனியே ஒரு அறையில் உட்கார வைத்து அவனை செய்முறைத் தேர்வு எழுதவைக்க முயற்சித்தனர். ஆனால் என் மகனோ, மனநிலை பாதிக்கப்பட்டதுடன் பல்வேறு சேஷ்டைகளை தொடர்ந்து செய்து வந்தான். கேள்வியையும், பதிலையும் கமலக்கண்ணன் ஆசிரியர் சொல்லச் சொல்ல என் மகன் முடிந்த அளவிற்றகு கொஞ்சம் எழுதுவதும் அப்புறம் அடம் பிடிப்பதுமாக இருந்தான். என் மகனை பின்பு அழைத்துக் கொண்டு நானும் என் மனைவியும் வீட்டிற்கு வந்துவிட்டோம். தொடர்ந்து ஒவ்வொரு
நாளும் ஆசிரியர்கள் என் வீட்டிற்கு வந்து, எனது மகனை தொடர்ந்து பள்ளிக்கு அனுப்பும்படியும், அப்படி வந்தால் எப்படியும் பாஸ் செய்து விடுவார்கள் என்றும் கூறி வந்தனர்.
7. கடந்த 26.02.2013 அன்று மேற்படி பள்ளி நிர்வாகி, அவர்
கடையில் வேலை செய்யும் எனக்குத் தெரிந்த ஒரு இஸ்லாமியர் மூலம் அவர் கடைக்கு வரும்படி அழைத்தார். நான் மேற்படி பெரியவர் தாமோதரனுடன் சென்று, பள்ளி நிர்வாகியை அவருடைய கடையில் சந்தித்தேன். என்னுடன் வந்த பெரியவர்
மேற்படி தியாகராஜனிடம்
‘அந்த ஆசிரியரைக் கூப்பிட்டு பையனிடம் பேசச் சொல்லியிருந்தால் அவன் கோபம் குறைந்து
குணமாகியிருப்பான்” என்று கூறினார். அப்போது அவர் கூறுகையில் ‘அந்த ஆசிரியர் நல்லவர்..... அவரது சகோதரர்கள் பெரிய உத்தியோகத்தில் உள்ளனர்..... ஏதோ நடந்து விட்டது. நமக்கு பையனுடைய எதிர்காலம் முக்கியம். அவனுக்கு ஒரு வருடம் வீணாகக் கூடாது, புதன், வியாழன் இரண்டு நாளும் பள்ளிக்கு பையனை அழைத்து வாருங்கள். வெள்ளிக்கிழமை அவனை தனி அறையில் உட்காரவைத்து ஆசிரியரையும் உடன் வைத்து பரீட்ச்சை எழுதவைப்போம். அதிகாரிகளிடம் நான் பேசிக் கொள்கிறேன், அவன் பாஸ் பண்ணுவான்” என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் “ரொம்பவும் கஷ்டப்பட்ட குடும்பம் என்றும், சிகிச்சைகாக ஆட்டோவில் கூட்டிச் செல்ல நிறைய செலவு ஆகிறது என்றும் கூறினார்கள். நீங்கள் எவ்வளவு மேண்டுமென்று கூறினால் கொடுத்து விடுகிறேன்” என்றார். என்னுடன் வந்த மேற்படி பெரியவர் தாமோதரன் கூறுகையில் ‘அடித்த ஆசிரியர் அவர் சம்பளத்தில் பாதியை பையன் குணமடையும் வரையில் கொடுக்கச் சொல்லுங்கள். ஒரு மாதத்தில் குணமடைந்தால் கூட அடுத்த மாதமே நிறுத்திக் கொள்ளுங்கள்” என்று கூறினார். ‘‘அதையெல்லாம் அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் நாளை பையனை பள்ளிக்கு அழைத்து வாருங்கள்” என்று கூறி மேற்படி பள்ளி நிர்வாகி எங்களை அனுப்பினார்.
8. என் மகனுக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவார் ஆலோசனைப்படி நான் பையனை பள்ளிக்கு அழைத்துச் செல்லவில்லை. அடுத்து, என் வீட்டின் எதிர்
வீட்டு மாடியில் இருப்பவரும் மேற்படி பள்ளி ஆசிரியையுமான ஷீலாவும் அவருடைய கணவரும் என்னிடமும் என் மனைவியிடமும் அறிவுரை சொல்வது போன்று கூறுகையில் ‘பள்ளி நிர்வாகியிடம் ஒரு குறிப்பிட்ட தொகையைப் பெற்றுக் கொண்டு அவர்கள் கேட்கிறபடி எழுதிக்கொடு” என்று கூறினார்கள். அதற்கு நானும் என் மனைவியும் உடன்படவில்லை.
என் மகனை அடித்த ஆசிரியர் என் மகனிடம் மன்னிப்பு கேட்டால், என் மகன் சாந்தமடைந்துவிடுவான் என்ற நம்பிக்கையில் இருந்துவிட்டேன். மேலும் பள்ளி நிர்வாகி ராம்டெக்ஸ் தியாகராஜன் பணபலம் மிக்கவர் என்றும், அவரை எதிர்த்து ஏதும் செய்ய முடியாது என பலர்
என்னிடம் கூறிவந்தாலும் நான் புகார்
அளிக்கத் தாமதமானது.
என் மகனை மேற்படி ஆசிரியர் வகுப்பறையில் மாணவ, மாணவிகள் முன்னிலையில் அடித்ததால், இந்த ஆண்டு தற்சமயம் நடைப்பெறும் பொதுத் தேர்வை எழுத முடியாமல் போனதோடு அவனுடைய எதிர்காலமும் கேள்விக்குறியாகிவிட்டது. என் மகனை அடித்த மேற்படி ஆசிரியர் வெங்கட்ராமன் மீதும் அவரைப் பாதுகாக்க முயற்சி செய்துவரும் பள்ளி நிர்வாகி ராம்டெக்ஸ் தியாகராஜன் மீதும் நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நீதி கிடைக்க உதவுமாறு தங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.
இவண்
இணைப்பு:
1. 26.01.2013 நாளிட்ட டாக்டர் கே. பாலசுப்பிரமணியன் அவர்களின் மருத்துவச் சீட்டு நகல்.
2.27.01.2013 நாளிட்ட டாக்டர் எஸ்.என்.பாலசுப்பிரமணியன் அவர்களின் மருத்துவச் சீட்டு நகல்.
3.28.01.2013 நாளிட்ட மருத்துவர் கே.பாலன் பொன்மணி ஸ்டீபன் அவர்களின் மருத்துவச் சீட்டு நகல்.
4.ஜிப்மப் மருத்துவமனை மருத்துவக் கோப்பு.
நகல்:
1.உள்துறைச் செயலாளார், சென்னை-9
2.காவல்துறை தலைமை இயக்குனர், சென்னை - 4
3.காவல் கண்காணிப்பாளர், விழுப்புரம் - 605 602
4.மாவட்ட ஆட்சித்தலைவர், விழுப்புரம் - 605 602
5.முதன்மைக் கல்வி அலுவலர், விழுப்புரம் - 605 602
6.காவல் துறைக் கண்காணிப்பாளர், திண்டிவனம்
7.மாவட்டக் கல்வி அலுவலர், திண்டிவனம்-1
No comments:
Post a Comment