Wednesday, March 24, 2010

தமிழகத்தின் பல பகுதிகளிலும் போலீசாரின் என்கவுன்டர்கள் தொடர்ந்து அதிகரித்தபடி இருந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம் மதுரை என அடுத்தடுத்து கொலைகளைச் செய்தனர் தமிழகப் போலீசார். இந்தக் கொலைகள் தமிழகத்தில் எந்தவித அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. சாலை விபத்துகளைப் போன்ற சாதாரண நிகழ்வுகளாக மாற்றினர் போலீசார்.
இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார், கடந்த 4 ஆண்டுகால தி.மு.க ஆட்சியில் நிகழ்ந்த 26 என்கவுன்டர் படுகொலைகளுக்கும் சி.பி.ஐ விசாரணைக் கேட்டு வழக்கு தொடுத்தார். விசாரணைக்கு ஏற்ற மதுரை உயர்நீதிமன்றம் 25&03&10 அன்று சி.பி.ஐ, மற்றும் அரசு அதிகாரிகளுக்கு அழைப்பானை அனுப்பியுள்ளது. வழக்கறிஞர் ராபர்ட் சந்திரகுமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கீழே உள்ளது

அனுப்புநர்

இ. இராபர்ட் சந்திரகுமார்
வழக்கறிஞர்,
த/பெ. கோ.இம்மானுவேல்,
எண். 99இ வழக்கறிஞர் வளாகம்,
உயர்நீதிமன்றம்,
மதுரை.23

பெறுநர்

உயர்திரு. உள்துறை செயலர் அவர்கள்,
தலைமைச் செயலகம்,
புனித ஜார்ஜ் கோட்டை,
சென்னை

ஐயா,

பொருள் : கடந்த 16.02.2010 செவ்வாய் கிழமை நண்பகல் சுமார் 12.20 மணியளவில் மதுரை தெப்பக்குளத்தில் இருந்து இராமநாதபுரம் செல்லும் சாலையில் உள்ள காவல் சோதனை சாவடியில் வைத்து கல்மண்டையன்(எ)முருகன் (27/10) த/பெ.ஆறுமுகம், மற்றும் கவியரசு த/பெ. மச்சக்காளை ஆகியோரை என்கவுண்டர் என்;ற பெயரில் சுட்டுக்கொலைசெய்த, மதுரை மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் வெள்ளைத்துரை மற்றும் அவரது தலைமையிலான காவலர்கள் மீதும், கீரைத்துறை காவல்நிலைய சார்புஆய்வாளர் தென்னரசு, மதுரை தெப்பக்குளம் காவல்நிலைய தலைமைகாவலர் கணேசன் ஆகியோர் மீதும் கொலை வழக்கு பதிவுசெய்ய வேண்டியும். இவ்வழக்கினையும் தமிழகத்தில் 2006ல் இருந்து; மோதல்சாவுகள் என்ற பெயரில நடத்தப்பட்ட காவல்துறை உயர்அதிகாரிகளின் நேரடி பார்வையிலும் திட்டத்திலும் நடந்த 26; கொலைகளை ஊடீஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடுமாறும் வேண்டி மனு

நான் மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக மனித உரிமைகள் தொடர்பான பல்வேறு கட்டுரைகளை எழுதியும், மனித உரிமைகள் தொடர்பான பயிற்சி வகுப்புகளை எடுத்தும் வருகிறேன். மேலும் பல்வேறு மனித உரிமை ஆர்வலர்களுடனும் அமைப்புகளோடும் இணைந்து மனித உரிமை மீறல்களுக்கு எதிரான சட்டபூர்வமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறேன்.
இந்நிலையில் கடந்த 16.02.2010 செவ்வாய் கிழமை அன்று நண்பகல் 12.20 மணியளவில் மதுரை தெப்பக்குளத்தில் இருந்து இராமநாதபுரம் செல்லும் சாலையில் உள்ள காவல் சோதனை சாவடியில் வைத்து மதுரை மாவட்டம்இ நரிமேட்டைச் சேர்ந்த கல் மண்டையன் (எ) முருகன் (27ஃ10) தஃபெ.ஆறுமுகம் மற்றும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஆரியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மச்சக்காளை மகன் கவியரசு (32ஃ10) ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வந்தபோது மதுரை கீரைத்துறை சார்பு ஆய்வாளர் தென்னரசு இருவரையும் மறித்து விசாரித்தாகவும் உடனே இரண்டு காவலர்களை பட்டா கத்தியால் தாக்கியதாகவும் இதனால் மதுரை மாநகர் காவல்துறை உதவி ஆணையர் வெள்ளைத்துரை மற்றும் கீரைத்துறை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் தென்னரசு, தெப்பக்குளம் காவல்நிலைய தலைமை காவலர் கணேசன் (குற்றப்பிரிவு) ஆகியோர் என்கவுண்டர் என்ற பெயரில் சுட்டுக் கொலை செய்தனர் என்ற செய்தியை நான் அன்றைய (16.02.2010) மாலை நாளிதழ்களிலும் மற்றும் மறுநாள் 17.02.2010 தினசரி நாளிதழ்களிலும், தொலைக்காட்சியிலும் பார்;த்தேன்.
இதனைத் தொடர்ந்து மேற்படி என்கவுண்டர் தொடர்பான உண்மை நிலையை கண்டறிவதற்காக நிகழ்வு நடந்த இடத்தை அன்றைய தினம் இரவே நேரில் சென்று பார்த்ததோடு மேற்படி என்கவுண்டரில் இறந்து போன இருவரின் உடல் வைக்கப்பட்டிருந்த மதுரை ராஜாஜி அரசு பொது மருத்துவமனைக்கு சென்றேன். பின்னர் மேற்படி என் கவுண்டரில் கொலை செய்யப்பட்ட கல் மண்டையன் (எ) முருகனின் தாயார் குருவம்மாள் மற்றும் உறவினர்களை சந்தித்து மேற்கண்ட சம்பவத்தின் உண்மை நிலையைக் கேட்டறிந்தேன்.
மேற்படி என்கவுண்டர் நடந்த 16.02.2010ம் தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பதாகவே 14.02.2010 அன்று இரவு 12 மணியளவில் மதுரை நரிமேட்டில் உள்ள கல் மண்டையன் (எ) முருகனின் வீட்டிற்குள் மதுரை கீரைத்துரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தென்னரசு, தெப்பக்குளம் காவல்நிலைய தலைமை காவலர் கணேசன் மற்றும் அவர்களது தலைமையிலான சீருடை அணியாத 7 போலீசார்கள் அத்துமீறி நுழைந்தும் கல் மண்டையன் (எ) முருகனின் தாயார் குருவம்மாளிடம் அவரது மகனை எங்கு இருக்கிறான் என மிரட்டி லத்தியால் அவரது பின் புறத்தில் அடித்துள்ளனர். மேலும் கல் மண்டையன் (எ) முருகன் எங்களிடத்தில் சரண்டர் ஆகும் வரை உங்களை காவல்நிலையத்திலேயே அடைத்து வைக்கப் போகிறோம் என்று மிரட்டியதோடு முருகனின் தாயார்; குருவம்மாள் அவரது, அக்கா, தனலெட்சுமி, அக்கா மகன் கலைவேந்தன் அக்கா கணவர் செல்வம், தம்பி மணி மற்றும் பெரியப்பா மகன் மலைச்சாமி மற்றும் பெரியப்பா மகன் ராக்கு ஆகியோரை மேற்படி எஸ்.ஐ. தென்னரசு தலைமைக் காவலர் கணேசன் ஆகியோர் போலீஸ் ஜீப்புக்குள் மதுரை மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் வெள்ளைத்துரைக்கு முன்பாக அழைத்து சென்று தகாத வார்த்தைகளால் திட்டி கடுமையாகத் தாக்கியுள்ளனர்.
மேலும் கல் மண்டையன் (எ) முருகனின் குடும்பத்தினரிடமும் கல் மண்டையன் எங்கிருக்கிறான் என அடையாளம் காட்டுமாறும் இல்லையெனில் குடும்பத்தினர் அனைவர் மீதும் கஞ்சா வழக்கு போட்டு ஜென்மத்திற்கும் வெளியே வரமுடியாதபடி செய்துவிடுவோம் என மிரட்டியதோடு கல் மண்டையனின் தம்பி மணி, செல்லப்பா மகன் ராக்கு, மற்றும் மலைச்சாமி ஆகியோரை கைகளை மேலே து}க்கச் சொல்லிவிட்டு லத்தியால் பின்புறத்தில் தாக்கியுள்ளனர். அவர்கள் அடிபடுவதிலிருந்து தவிர்ப்பதற்காக கையை நீட்டியதால் மணி, மலைச்சாமி ஆகியோரது கை மணிக்கட்டு மற்றும் விரலில் பலத்தக் காயம் மற்றும் வீக்கம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மேற்கண்ட அனைவரையும் மதுரை தெற்குவாசல் காவல்நிலையத்தில் இரவு முழுவதும் சட்டப்புறம்பாக அடைத்து வைத்திருந்தனர்.
மேலும் கல் மண்டையனின் அக்கா மகன் கலைவேந்தனை ஜீப்புக்குள வைத்தே கன்னம், காது, முட்டியில் காலாலும், கையாலும் அடித்திருக்கின்றனர். மேற்கண்ட நிகழ்வுகளுக்கு பின்னர் கல் மண்டையன் என்ற முருகன் 14.02.2010 அன்று காலை சுமார் 5.15 மணிக்கு சார்பு ஆய்வாளர் தென்னரசுவிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு என்னை எதற்காக தேடுகிறீர்கள் என கேட்டதற்கு ஒரு சிறிய விசாரணை இருக்கிறது. அதற்கு நீயும் உனது நண்பன் உசிலம்பட்டி, ஆரியப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கவியரசும் வந்து எங்களுக்கு ஒத்துழைத்தால் போதும் என்று கூறியுள்ளனர். அதோடு கல் மண்டையனிடம் (எ) முருகனிடம் அவரது குடும்பத்தினர் அனைவரும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நீ காவல்நிலையத்திற்கு வரவில்லையெனில் நாங்கள் அனைவரும் சாவதை தவிர வேறு வழியில்லை என கூறியதை தொடர்ந்து கல் மண்டையன் (எ) முருகன் தனது குடும்பத்தை விட்டுவிடுமாறும் தான் விருதுநகர் மாவட்டம் திருச்சுழி திம்மபுரம் சுடுகாட்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார். பிறகு கல் மண்;டையன் என்ற முருகனின் பெரியப்பா மகன் ராக்கு மற்றும் மலைச்சாமியை அழைத்துக் கொண்டு திம்மபுரம் சுடுகாட்டிற்கு முருகனை தேடி சென்றுள்ளனர். அங்கே கல்மண்டையன் (எ) முருகன் தானாகவே போலீசாரிடம் சரணடைந்துள்ளார்;. அதன்பிறகு காலை 10 மணிக்கு கல் மண்டையனின் குடும்பத்தினரை காவல்துறை உதவி ஆணையாளர் வெள்ளைத்துரை மற்றும் கீரைத்துறை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் தென்னரசு ஆகியோர் எழுதி வாங்கிக் கொண்டு வெளியேவிட்டுள்ளனர்.
பின்னர் கல் மண்டையன் என்ற முருகன்;, கவியரசு ஆகியோரை பிடித்த உதவி காவல்துறை ஆணையர் வெள்ளைத்துரை மற்றும் சார்பு ஆய்வாளர், தென்னரசு, தலைமைக் காவலர் கணேசன் ஆகியோh,; முருகன் மற்றும் கவியரசு இருவரையும் 14.02.2010 மற்றும் 15.02.2010 முழுவதும் கடுமையாக தாக்கியுள்ளனர். மேற்கண்ட சித்ரவதைகள் அனைத்தும் முடிந்த பின்னரே கடந்த 16.02.2010 அன்று மதுரை தெப்பக்குளம் முதல் விரகனு}ர் சுற்றுச்சாலை வரை காலை சுமார் 11.30 மணியில் இருந்து பொதுமக்கள் போக்குவரத்துக்கும் வாகனம் செல்வதற்கும் மதுரை மாநகர காவல்துறையினரால் தடைசெய்யப்பட்டு ;பின்னர் நண்பகல் 12.20 மணியளவில் காவல்துறை உதவி ஆணையாளா மற்றும் அவரது தலைமையிலான காவலர்கள், சார்பு ஆய்வாளர் தென்னரசு, தலைமை காவலர் கணேசன் ஆகியோர், மோதல் சாவுகள் என்ற பெயரில் கொடூரமாக, மனித தன்மையற்று, இயற்கை நீதிக்குப் புறம்பாக சுட்டுக் கொலை செய்துள்ளனர்.
தமிழகத்தில் 2006 முதல்; கீழ்கண்ட கொலைகள் தமிழக காவல்துறையினரால் நிகழ்த்தப்பட்டுள்ளன

பெயர் முகவரி மாவட்டம்
1. ராஜன் என்ற உருண்டை ராஜன் (25) வடக்கு குண்டல் கிராமம் கன்னியாகுமரி
2. நூகூர் மீரான் (35) புக்தவச்சலம் காலனி, வியாசர்பாடி, சென்னை
3. செந்தில்குமார் (29) செல்வகணபதி நகர், திருவேற்காடு, சென்னை
4. குமார் என்ற பங்கு குமார் கோத்தவால்சாடி தெரு, சைதாப்பேட்டை சென்னை
5. வெள்ளை ரவி, வியாசர் பாடி சென்னை
6. குணா, வியாசர் பாடி சென்னை
7. ரவி என்ற முட்டை ரவி (35) புpச்iசாண்டார் கோயில், மணச்சநல்லு}ர் தாலுகா, திருச்சி
8. கிருஷ்ணன் என்ற கொரகிருஷ்ணன் (எ) 7) திருக்காளிமேடு, காஞ்சிபுரம்
9. அசோக் (21) சு10ணாம்பேடு கிராமம், செய்யூர் சென்னை
10. மாரிமுத்து என்ற டோரி மாரி (32) மீனாட்சிபள்ளம், காஜா தெரு, தெற்குவாசல் மதுரை
11. சங்கர் என்ற மணல்மேடு சங்கர் களத்து}ர், மணல்மேடு, நாகப்பட்டினம்
12. மிதுன் சக்கரவர்த்தி (27) மருதாநல்லு}ர், கும்பகோணம் தஞ்சாவூர்
13. பாம்பாலாஜி தஞ்சாவூர்
14. ஜெயக்குமார் (33) காந்தி சாலை, பணியநகர், து}த்துக்குடி
15. சுடலை மணி (24) போல்டன் புரம் 2வது தெரு, து}த்துக்குடி
16. நவீன் பிரசாத் வடகவுஞ்சி, கொடைக்கானல் திண்டுக்கல்
17. கோபி (28), அக்கரைப்பட்டி கிராமம், ராசிபுரம் நாமக்கல் மாவட்டம்
18. தெய்வேந்திரன், கீழக்கூடலு}ர், உத்தமபாளையம் தாலுகா தேனி
19 சண்முகம் அரண்மணை சிறுவயல், காரைக்குடி சிவகங்கை
20. தனசேகரன் பழனிபேட்டை, அரக்கோணம் வேலு}ர்
21. சந்தரமூர்த்தி (37) குன்னு}ர் புது}ர் கிராமம், கிருஷ்ணன்கோவில், திருவில்லிபுத்து}ர் விருதுநகர்
22. செந்தில் என்ற குரங்கு செந்தில் (30) விளாந்திடல் சமுத்திரம்
23. பாண்டியன் சவுரியார் பாளையம், பேகம்பூர் திண்டுக்கல்
24. வேலு (40) நந்திவரம், கூடுவாஞ்சேரி, காஞ்சிபுரம்

இவர்கள் தவிர மதுரையில் தெப்பக்குளம் பகுதியில் கவியரசு, கல்மண்டையன் ஆகிய இருவர் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இவர்களையும் சேர்ந்து சுட்டு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 ஆகிறது.
இவ்வாறு கொலைகளில் ஈடுபடுபவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்ற தேசிய மனித உரிமை ஆணையத்தின் வழிகாட்டுதல்கள் இருந்த போதிலும் அந்த போலி மோதல்களில் ஈடுபட்டவர்களுக்கு அரசு முறையற்ற பதவி உயர்வும், அக்கொலைகளில் ஆயுதமற்ற மனிதனை சுற்றி நின்று மிகவும் அண்மையில் நின்று கோழைத்தனமாக சுட்டு கொல்பவர்களுக்கு வீரர்களைப் போன்ற ஊடக சித்திரிப்பும் கிடைப்பதால் மறுபடியும் மறுபடியும் இந்தக் கோழைத்தனமான கொலைகள் தமிழகத்தில் நிகழ்த்தப்படுகின்றன.
எனவே, தேசிய மனித உரிமைகள் ஆணையம் வரையறுத்துள்ள மோதல் சாவுகள் நிகழ்வுகளின் போது கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகளை பின்பற்ற வேண்டியும், கடந்த 16.02.2010ல் மதுரையில் மோதல் சாவுகளை நிகழ்த்திய காவல்துறை உதவி ஆணையாளர் வெள்ளைத்துரை மற்றும் அவரது தலைமையிலான போலீசார்கள, கீரைத்துறை காவல்நிலைய சார்பு ஆய்வாளர் தென்னரசு, தெப்பக்குளம் காவல்நிலைய தலைமைக் காவலர் கணேசன் ஆகியோர் மீது கெலை வழக்கு பதிவு செய்வதோடு மட்டுமின்றி, இவ்வழக்கினையும் தமிழகத்தில் 2006ல் இருந்து; மோதல் சாவுகள் என்ற பெயரில நடத்தப்பட்ட காவல்துறை உயர்அதிகாரிகளின் நேரடி பார்வையிலும் திட்டத்திலும் நடந்த 26; கொலைகளை ஊடீஐ விசாரணைக்கு மாற்ற உத்தரவிடுமாறும் கேட்டுக் கொள்கிறேன்.
இடம் : மதுரை ஐ.இராபர்ட் சந்திரகுமார்.
நாள் : 19.02.10

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in