திண்டிவனம் தலைமைக் காவலர் மீது
வழக்கு பதிய நீதிமன்றம் உத்திரவு
கடந்த அக்டோபர் மாதம் திண்டிவனம்- ரோசனை தலித் வழக்கறிஞர் பூபால் காவல் நிலையம் சென்றபோது, அங்கிருந்த காவலர்களால் தாக்கப்பட்ட சம்பவத்தை பதிந்திருந்தேன்.
இந்நிலையில், தன்னைத் தாக்கிய தலைமைக் காவலர் சுப்பையா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி உயரதிகாரிகள் அனைவருக்கும் வழக்கறிஞர் பூபால் புகார் மனு அனுப்பியிருந்தார்.
திண்டிவனத்தில் ‘‘நகரக்கல்வி மக்கள் மேம்பாட்டுக் குழு’’ பல்வேறு அமைப்புகளையும் ஒருங்கிணைத்து, சுப்பையா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இதனையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தின் அப்போதைய காவல் கண்காணிப்பாளர் திரு.அமுல்ராஜ், சம்பவம் தொடர்பாக விசாரித்து, தலைமைக் காவலர் சுப்பையாவை காத்திருப்போர் பட்டியலில் வைத்தார்.
இதற்கிடையில், நடவடிக்கைகோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் பூபால் வழக்குத் தொடர்ந்திருந்தார். 22-02-10 திங்களன்று விசாரனைக்கு வந்த இவ்வழக்கில், வழக்கறிஞர் பூபாலின் புகாரின் அடிப்படையில் தலைமைக்காவலர் சுப்பையா மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்திரவிட்டுள்ளது.
வழக்கறிஞர் பூபால் சார்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சத்தியச்சந்திரன் அவர்கள் வாதிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment