கடலூர் மாவட்டம் தியாகவல்லி மற்றும் குடிகாடு ஆகிய பஞ்சாயத்துகளை உள்ளடக்கிய 13  கிராமங்களையும்  காலி  செய்து  1270 ஏக்கர் நிலப்பரப்பில், கடலூர் பவர் கார்ப்பரேஷன் லிமிடெட்  என்ற  கம்பெனி, 1320 மெகாவாட்  திறனுள்ள அனல் மின்  நிலையம்  அமைக்க திட்டமிட்டுள்ளது.  6004 கோடி  ரூபாய் முதலீட்டில்  அமைக்கப் பட உள்ள  இந்த அனல்மின் நிலையத்திற்கான  70% நிதியை  இந்திய  நிதி  நிறுவனங்களின்  உதவியால்  திரட்டுவது என அறிவித்துள்ளார்கள்.  இதற்காக  முந்திரி தோப்புகள்  அடங்கிய  400 ஏக்கர் நிலம் ஏற்கனவே கையகப்படுத்தப்பட்டுள்ளது.  மீதமுள்ள  தனியார்  நிலத்தைக் கையகப்படுத்வதற்கான வேலயை தொடங்கியது நிர்வாகம்.
 
 அதற்கான முதல் கட்டமாக மக்களின் கருத்து கேட்புக் கூட்டத்தினை 07-09-07 அன்று பிற்பகல் 3-30 மணிக்கு, கடலூர்  இம்பீரியல்  சாலையில்  உள்ள வள்ளி விலாஸ் வி.சி. சுப மகாலில், தமிழ் நாடு  மாசு கட்டுப்பாடு  வாரியத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் ராஜேந்திர ரத்னு, மாசு  கட்டுபாட்டு வாரிய  பொறியாளர்  ராமசுப்பு மற்றும் அதிகாரிகள் நடத்தினார்கள். கூட்டத்திற்கு தியாகவல்லி பஞ்சாயத்ட்தைச் சேர்ந்த லெனின் நகர்,. பெரியார் நகர், அம்பேத்கர் நகர், நந்தன் நகர், வள்ளலார் நகர்  ஆகிய கிராமங்களில்  இருந்து  5 லாரிகளில் 1000 -க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்தனர். அது மட்டுமில்லாமல் நொச்சிக்காடு, சித்திரப்பேட்டை, தியாக வல்லி, நடுத்திட்டு  போன்ற  கிராமங்களில் இருந்தும்  100 கணக்கான மக்கள் மண்டபத்திற்கு வந்திருந்தனர்.
 கூட்டத்தின்  தொடக்கத்தில் ஆட்சியர்,  அனல் மின்  நிலயத்தின் பயன் குறித்து பேசி படம் ஒன்றப்  போடுவதற்கு  முயற்சித்தார்.  அப்போ தியாகவல்லியச்  சேர்ந்த சாமிகச்சிராயர் என்ற இளைஞர்  ஒருவர் எழுந்து ‘‘முதலில் ம க்களின் கருத்தைக்  கேளுங்கள்,  பிறகு படம் போடுங்கள்’’ என்றார்.  அதற்கு ஆட்சியர் அந்த  இளைஞரைப்  பார்த்து  ‘‘நீங்கள் ஒன்றும் பேசவேண்டாம், உட்காருங்கள்’’ என்று ஆங்கிலத்தில் கூறினார். இதனால் கோபமடைந்த மக்கள் ஆட்சியரிடம் முதலில் எங்கள்  கருத்தைக் கேளுங்கள்  என்று கூறினார்கள்.  ஆனால் ஆட்சியர் மக்களிடம் மீன்டும் மீன்டும் தனது கருத்களை கூறுவதற்கு முயன்றார். இதனால் மக்கள் ஆட்சியர் அவர்களை நெருங்கி நேரிடையாக இத்திட்டம் எங்களுக்கு வேண்டாம் என்பதைக் கூறினார்கள். அப்போது பெண்களும் ஆட்சியரிடம் நேரில் சென்று தங்களுடய கோரிக்கையை முறையிட்டனர். பல பெண்கள் ஆட்சியர் மற்றும் அங்கிருந்த மற்ற அதிகாரிகள் ஆகியோரின் கால்களில் விழுந்து கெஞ்சி,   ‘‘இந்த  திட்டத்தைக்   கொண்டு  வராதீர்கள்,    எங்களை  ஊரை  விட்டு காலி செய்யாதீர்கள்’’ அழுது புலம்பினார்கள். ஒரு சிலமக்கள் மேடையில் ஏறி மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டனர்.அதனால் ஆட்சியரால் பேசமுடியாமல்போனது.ஆண்கள்,பெண்கள்,இளைஞர்கள், குழந்தைகள் என அனைவரும் ‘‘இத்திட்டம் வேண்டாம்’’ என்று முழக்கமிட்டனர்.
 அப்போது உள்ளே நுழைந்த அதிரடிப்படை ஆண் போலீசார்,ஆட்சியரிடம் முறையிட்டுக் கொண்டிருந்த  பெண்களை  கையை  பிடித்து கீழே  தள்ளினார்கள்.  அத்துடன் அப்பெண்கள் மீது  தடியடி  நடத்தினார்கள். இதனால் பெண்கள் அலறியடித்து பயந்து கீழே விழுந்து எழுந்து மண்டபதை  விட்டு கோபத்துடன் வெளியேறி சாலையில் உட்கார்ந்து சாலை மறியல் செய்தனர். அதிரடிப்படை ஆண்போலீசார் பெண்களை அடிப்பதைப்பார்த்த இளைஞர்கள்சிலர் ஆவேசப்பட்டு நாற்காலிகளை  தூக்கி வீசினார்கள்.  அதிரடிப்படை போலீசார் உள்ளே நுழைவதைப் பார்ததுமே அதிகாரிகள்  கூட்டதை  நிறுத்திவிட்டு  மாவட்ட ஆட்சியரை அழைதுக்கொண்டு மண்டபத்தை விட்டு வெளியேறினார்கள்.
 போலீசார்  அடித்ததால்  மண்டபத்தை  விட்டு வெளியேறிய மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.  போலீசார்  மேலும்  மேலும்  அதிரடிப்படைப் போலீசாரை வரவழைத்த படியே இருந்தனர்.  தண்ணீர்  பீய்ச்சி அடிக்கும்   வஜ்ராவாகனத்தைக் கொண்டு வந்து நிறுத்தினார்கள். அதன்  பிறகு  ஆர்.டி.ஓ  பிருந்தாதேவி  அவர்கள்  வந்தார்கள்.  பேச்சுவார்த்தைக்கு  என  மண்டபத்தின்  உள்ளே  அழைத்துச்  சென்று,  மைக் தயார் செய்து மக்கள் ஒவ்வொருவரையும் பேசச்சொல்லி அதைப் பதிவு செய்தார்கள். கொஞ்ச நேரத்திற்கு பின்புதான், ஆட்சியரால் நடத்த முடியாமல்போன  கருத்துக்கேட்புக்  கூட்டத்தை ஆர்.டி.ஓ  நடத்கிறார்களோ  என்ற சந்தேகம் வந்து  மக்கள் அக்கூட்டத்தை விட்டு வெளியேறினார்கள்.  
‘‘இத்திட்டத்திற்காக காலம் காலமாக நாங்கள் வாழ்ந்து,  அனுபவித்த இடத்திலிருந்து, எங்களை கட்டாயமாக  வெளியேற்றுவது  என்பது   எங்களை  உயிரோடு கொலை செய்வதற்கு சமமான செயலாகும்’’ என மக்கள் அழுது புலம்பினார்கள். மேலும் மக்கள் ‘‘இதன் காரணமாக  எங்கள் பகுதி  நிலம், நீர், காற்று, கடல்  வளம் மாசுபடுத்தப்பட்டு,  இயற்க  பேரழிவுகளுக்கு ஆளாக நேரிடும். இதுமட்டுமில்லாமல் எங்களின் வாழ்வாதரங்கள் முழுவம் பாதிக்கப்படும். இதனால்தான் இத்திட்டம் வேண்டாம் என்கிறோம்’’ என்று கூறினார்கள்.
இது தொடர்பாக மக்கள் கீழ்கண்ட கோரிக்ககளை முன்வைத்து போராடத்தொடங்கியுள்ளனர்.
1. மக்களின் வாழிடங்களையும், விளை நிலங்களையும்,  மீன் பிடி தொழிலையும் முழுமையாக பாதிக்கின்ற இந்த அனல் மின் நிலயம் அமக்கும் திட்டத்தினை அரசு கைவிடவேண்டும்.
2.மாவட்ட ஆட்சியரிடம்  முறையிடச் சென்ற  பெண்களை கையப் பிடித்து  இழுத்து  கீழே தள்ளியதுடன், அப்பெண்கள் மீது தடியடி செய்து அடித்த  போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
3.இத் திட்டத்தின்  பாதிப்புகள்  குறித்து  முழுமையாக அறிவதற்காக அறிஞர்கள் மற்றும் பிற வல்லுநர்கள் கொண்ட ஒரு வல்லுநர் குழு அமைக்கவேண்டும்.
4.போலீசார்  அடித்ததால் ஆவேசப்பட்ட மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். எனவே மக்கள் மீது போடப்பட்டுள்ள  வழக்கினை திரும்பப் பெறவேண்டும்.
5. இப் பகுதியில்   நிலத்தை   வாங்கவோ,  விற்கவோ  பதிவு  அலுவலகத்தில்  இருக்கின்ற தடையை நீக்கவேண்டும்.
No comments:
Post a Comment