Monday, April 9, 2007

பண்பாடும் உலகமயமாக்கமும்

நீண்டநாட்களுக்குப் பிறகு, தொ.பரமசிவன் எழுதிய 'அறியப்படாத தமிழகம்' என்கிற மிகச்சிறந்த நூல் ஓன்றை படித்தேன். எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டிய முக்கியச்செய்தி என்பதால் மட்டுமில்லாமல், நீண்டநாட்களாக என்னுடைய இப்பக்கத்தில் எதுவும் பதியாமல் இருந்த கால இடவெளியை சரிசெய்யவும் இக்கருத்து பொருத்தமாக இருக்கும் என்றும் நினைக்கிறேன்.

அப்புத்தகத்தின் முன்னுரையில்,'' இன்று உலகமயமாக்கம் மிகப்பெரிய பண்பாட்டு நெருக்கடியினை நமக்கு உருவாக்கியுள்ளது. அதனை நாம் முழுமையாக உணர்ந்தபாடில்லை. ஒற்றைப் பண்பாட்டை உருவாக்கும் இந்த நெருக்கடியிலிருந்து மீள்வதற்குப் பண்பாட்டின் பன்மியத்தன்மையினை உணர்வதும் பேணுவதுமே வழிதுறைகளாக அமையும் என்று நான் நம்புகிறேன். இந்த நம்பிக்கையே இந்த எழுத்துகளை மீண்டும் அச்சேற்றுவதற்கான அடிப்படை.'' என்று கூறியுள்ளார்.

நந்திகிராம மக்களின் எழுச்சி இந்த நம்பிக்கையின் வெளிப்பாடுதான் என்று நான் பார்கிறேன். இது மட்டுமில்லாமல் புதுச்சேரியில் மக்கள் உரிமைக் கூட்டமைப்பு, தந்தை பெரியார் திராவிடர் கழகம் மற்றும் பல்வேறு கிராம பஞ்சாயத்து அமைப்புகளும் சேர்ந்து துறைமுக விரிவாக்கத்திட்டம், துணை நகரம் போன்ற மக்களை பாதிக்கின்ற திட்டங்களை எதிர்த்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது ஏதோ அரசாங்கத்திற்கோ அல்லது உலகமயமாக்கத்திற்கோ மட்டும் ஏதிரான போராட்டங்கள் இல்லை. நம்முடைய பண்பாட்டு அடையாளங்களை மீட்பதற்கான போராட்டமும் கூட.

உலகமயமாக்கத்தை எதிர்ப்பது என்பது வெளிநாட்டு மூலதனத்தை எதிர்ப்பது மட்டுமில்லை. நம்முடைய பண்பாடுகளை மீட்பதும் கூடத்தான்.

No comments: